"சரி, உங்க இஷ்டப்படியே அந்த 'பொண்ணு' கூட வாழலாம்... ஆனா ஒரு 'கண்டிஷன்'..." தடம் மாறிய 'கணவர்'... பதிலுக்கு 'மனைவி' கேட்ட ‘அந்த’ ஒரு விஷயம்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவர், தன்னுடன் பணிபுரியும் சக பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததை அவரது மகள் கண்டுபிடித்து வழக்கு தொடுத்திருந்தார்.
தந்தைக்கு வேறொரு பெண்ணுடன் நெருக்கம் இருக்கும் விஷயம் தனது தாய்க்கு தெரிய வந்ததால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என்றும், இதனால் தனக்கும், தனது சகோதரிக்கும் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் மகள் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தம்பதியர் இருவருக்கும் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அந்த கணவர், தனது மனைவியை பிரிந்து தன்னுடன் பணிபுரியும் பெண்ணுடன் வாழ வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். ஆனால், மனைவியோ, விவாகரத்து கொடுக்கத் தயாராகவில்லை. இதனால், தொடர்ந்து அவர்களிடம் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வந்த நிலையில், பல கட்டங்களுக்கு பின்னர் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.
தனது கணவரை ஒரே ஒரு கட்டளையுடன் பிரிந்து செல்ல மனைவி ஒப்புக் கொண்டார். அதாவது, தனது கணவர் விரும்பும் பெண்ணின் அபார்ட்மெண்ட் மற்றும் சுமார் 27 லட்ச ரூபாயை அவர்கள் தர சம்மதித்தால் தான் பிரிந்து செல்லலாம் என தெரிவித்துள்ளார்.
தன் மீது விருப்பமில்லாத ஒருவருடன் இனியுள்ள காலங்களில் இணைந்து வாழ விருப்பப்படாத மனைவி, தனது பெண் குழந்தைகள் இருவரின் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு தான் அப்படி ஒரு முடிவை அவர் எடுத்துள்ளார். சுமார் 1.5 கோடி ரூபாய்க்கு ஈடாக, கணவர் தனது காதலனை திருமணம் செய்து கொள்ளலாம் என மனைவி அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்