ஸாரி ஃப்ரண்ட்...! 'எனக்கு வேற வழி தெரியல...' 'நான் ஏன் உங்க வீட்ல திருடுறேன்னா...' - வேலைய முடிச்சிட்டு 'லெட்டர்' எழுதி வச்ச திருடன்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் கமலேஷ் கட்டார் என்பவர் வசித்து வருகிறார், இவர் சத்தீஸ்கர் மாநில காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

ஸாரி ஃப்ரண்ட்...! 'எனக்கு வேற வழி தெரியல...' 'நான் ஏன் உங்க வீட்ல திருடுறேன்னா...' - வேலைய முடிச்சிட்டு 'லெட்டர்' எழுதி வச்ச திருடன்...

இவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டினுள் சென்று பார்த்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டதும் செய்வதறியாது உறைந்து போயினர். வீட்டின் மேஜையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீஸ்காரரின் மனைவி எடுத்து படித்து பார்த்துவிட்டு அதிர்ந்து போய்விட்டார்.

இதுபற்றி, உடனடியாக தனது கணவர் கமலேஷ் கட்டாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அந்த பகுதி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திவிட்டு, அந்த கடிதத்தையும் படித்துப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி காவல்துறையினர் தெரிவிக்கையில், ‘வீட்டிற்குள் புகுந்த திருடன், வீட்டில் இருந்த பணத்தை  திருடி விட்டு  கடிதம் ஒன்றையும் எழுதியிருப்பது கிடைத்துள்ளது. அதில், மன்னிக்கவும் நண்பரே...! ஆனால் நான் தற்போது சிக்கலான சூழலில் சிக்கிக் கொண்டேன். என்னுடைய கடமையை நான் இந்த நேரத்தில் செய்யாவிட்டால், என் நண்பன்  சென்று விடுவான். அவனது உயிர் எனக்கு முக்கியம்.

நான் திருடக் கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால், இந்த நிலைமையில் உங்கள் வீட்டில் திருடுவதை தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை. காரணம், உங்களது வீடுதான் பூட்டப்பட்டிருந்தது. கவலைப்பட வேண்டாம், திருடிய பணத்தை எப்படியாவது உங்களிடம் திருப்பி தந்துவிடுகிறேன்’ என்று அதில் எழுதப்பட்டுள்ளது. மேலும், பணம், தங்க மற்றும் வெள்ளி நகைகளை திருடியிருப்பது தெரிய வந்துள்ளது. கமலேசின் குடும்பத்திற்கு நன்றாக அறிமுகமான யாரோ ஒருத்தர் தான் இந்த வேலையை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்" என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்