மனசுக்கு கஷ்டமா இருக்குங்க...! 'என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் தான்...' 'ஆனா அதவிட இப்போ இது தான் ரொம்ப முக்கியம்...' - நெகிழ வைத்த தந்தை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பலவருடங்களாக மகளின் திருமணத்திற்கு சேமித்த காசை ஒரே நிமிடத்தில் ஆக்சிஜன் இயந்திரம் வாங்க கொடுத்த நெகிழிச்சி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மனசுக்கு கஷ்டமா இருக்குங்க...! 'என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் தான்...' 'ஆனா அதவிட இப்போ இது தான் ரொம்ப முக்கியம்...' - நெகிழ வைத்த தந்தை...!

மத்திய பிரதேசம் நிமுச் மாவட்டத்தில் வசித்து வருகிறார் சம்பாலால் குர்ஜார் என்ற விவசாயி. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் கஷ்டப்படும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. அதோடு பலரும் தங்களால் இயன்ற அளவு உதவி செய்து வருகின்றனர்.

சம்பாலால் குர்ஜார், பல ஆண்டுகளாக சிறுக சிறுக மகளின் திருமணத்திற்காக ரூ.2 லட்சம் சேமித்து வைத்திருந்தார். ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் படும்பாட்டை பார்த்த சம்பாலால் குர்ஜார் மன வேதனை அடைந்து, மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த இரண்டு லட்சம் ரூபாயை இரண்டு ஆக்சிஜன் செறிவு இயந்திரங்களை வாங்க மாவட்ட நிர்வாகத்திடம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கூறிய குர்ஜாரின், 'கொரோனா வைரசால் மக்கள் இறப்பதை பார்த்து மன வேதனையாக இருக்கிறது. எல்லா பெற்றோரை போல என் மகளின் திருமணத்தை நன்றாக நடத்த 2 லட்சம் வரை பணம் சேமித்து வைத்திருந்தேன்.

ஆனால் இப்போது என் முடிவை மாத்தியுள்ளேன். எனது மகளின் திருமணத்தை ஒத்திவைத்துவிட்டு, சேமித்த பணத்தை கொடுத்துவிட்டேன். எனது முடிவை என் மகளும் ஏற்றுக் கொண்டார்' எனக் கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

மற்ற செய்திகள்