"யாரா இருந்தா என்ன.. வெளில வர்லாமா?".. 'ஊரடங்கில்' சொகுசு காரில் 'சிக்கிய' தொழிலதிபர் 'மகனுக்கு' தோப்புக்கரண 'தண்டனை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநில இந்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி சொகுசு காரில் ஜாலியாக ஊர்சுற்றிய தொழிலதிபர் மகனை பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி காரின் அருகிலேயே, சாலையிலேயே நிற்கவைத்து தோப்புக்கரணம் போடவைத்தார்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில், பாதுகாப்பு கவுன்சிலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறையினர், ராணுவ அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விலை உயர்ந்த சொகுசுக் காரில் ஜாலியாக சுற்றித் திரிந்த 20 வயது இளைஞரை, பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி மடக்கிப் பிடித்தார்.
மேலும் அந்த இளைஞர் செய்த வேலைக்கு தண்டனையாக தோப்புக்கரணம் போடவேண்டும் என்று தடியால் மிரட்டி கூற, அந்த பணக்கார இளைஞரோ அவர் சொன்னபடி தோப்புக்கரணம் போடுகிறார். விசாரணையில் அந்த இளைஞர் பிரபல மிட்டாய்க்கடை அதிபர் மகன் என தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இருந்தும் தனது மகனை பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி தரக்குறைவாக நடத்திவிட்டதாக அந்த மிட்டாய்க்கடை அதிபர் போலீஸாரிடத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.