விமானிக்கு ரூ.85 கோடி அபராதம்.. என் மேல தப்பு இல்லங்க.. வேணும்னா கருப்பு பெட்டிய செக் பண்ணுங்க.. நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் விமான நிலையத்தில் கடந்த வருடம் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மற்றும் கொரோனா தொற்று சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு சிறிய விமானம் ஒன்று இறங்கியுள்ளது.
காதல் மனைவியை கொன்றதற்கு காரணம் பணியாரம்.. கணவனின் அதிர வைக்கும் வாக்குமூலம்.. நடந்தது என்ன?
அந்த விமானத்தை மஜித் அக்தர் என்னும் விமானி ஓட்டி வந்துள்ளார். பறந்துக் கொண்டிருந்த விமானம் தரை இறங்கும்போது, ஓடுபாதையில் தற்காலிக தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.
ரூ.85 கோடி அபராதம்:
ஆட்களுக்கு சேதம் இல்லை என்றாலும் அந்த விமானம் அப்பளம் போல் நொறுங்கி பலத்த சேதமடைந்தது. இது குறித்து மத்தியப் பிரதேச அரசு அந்த விமானத்தை இயக்கிய விமானி மஜித் அக்தர் மீது வழக்கு பதிவு செய்தது. விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மத்தியப் பிரதேச அரசு கடந்த வாரம் விமானிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விபத்தின் காரணமாக சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு விமானம் பழுதானதாக தெரிவிக்கப்பட்டது. அரசு விமானம் பழுதானதால் மற்ற தனியார் விமானங்களை வாடகைக்கு எடுக்கப்பட்டது. எனவே அதற்காக ரூ.25 கோடியைச் சேர்த்து விமானிக்கு ரூ.85 கோடி அபராதம் விதித்துள்ளது.
ஏன் காப்பீடு செய்யவில்லை?
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக விமானி மஜித் அக்தர், ``குவாலியர் விமான நிலையத்தில் தற்காலிக தடுப்புச் சுவர் உருவாக்கப்பட்டிருந்ததை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் எனக்குத் கூறவில்லை. அதுமட்டுமல்லாமல், விமானத்துக்கு ஏன் காப்பீடு செய்யவில்லை என்பதற்கான காரணமும் தெரியவில்லை. காப்பீடு செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. விமானம் காப்பீடு செய்யாததற்கு யார் காரணம் என விசாரணை நடத்த வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
கருப்பு பெட்டி இன்னும் வழங்கப்படவில்லை:
சமீபத்தில் இது குறித்து விமானி பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், ``27 ஆண்டுகளுக்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவமுள்ளvan நான், குவாலியர் ஏ.டி.சி-யில் இருந்து பெறப்பட்ட அனைத்து அறிவுறுத்தல்களையும் கொண்ட கருப்பு பெட்டி இன்னும் வழங்கப்படவில்லை. எனக்கு அறிவுறுத்தல் வந்ததா என அதில் கண்டிப்பாக இருக்கும் இல்லையா?" என குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விமானி அக்தரின் விமான ஓட்டுநர் உரிமத்தை ஒரு வருடத்திற்கு முடக்கி உத்தரவு போடப்பட்டுள்ளது. விமான விபத்துப் புலனாய்வுப் பிரிவினரும் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்