“யோவ்... நீ எல்லாம் ஒரு மனுசனாயா...?” ..’சந்தேக பேய் பிடித்து... மனைவியின் பிறப்புறுப்பை’.. ’கணவன் செய்த கொடுரம்...! - “எங்க எக்ஸ்பீரியன்ஸ்ல இப்படி ஒரு கேஸ் பார்த்ததே இல்ல...!”
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 65 வயது முதியவர் ஒருவர் தன் மனைவிக்கு செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரோலி மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், தன் மனைவிக்கு அதே ஊரை சேர்ந்த இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக சந்தேகப்பட தொடங்கியுள்ளார்.
இதனை காரணமாகக் கொண்டு அடிக்கடி தன் மனைவியை மனரீதியாக புண்படுத்துவதும், அடிப்பதும், சித்திரவதை செய்வதுமாக இருந்துள்ளார். ஆனால், இந்த முறை அந்த பெரியவர் செய்த வெறிச் செயல் அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது.
சந்தேக வியாதி முற்றிப்போய் மனைவியின் அந்தரங்க உறுப்புக்கு தையல் போட்டுள்ளார். கணவரின் இந்த செயலை தாங்க முடியாத பாதிக்கபட்ட பெண், தன் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தனது அந்தரங்க உறுப்பை ஊசியால் தைத்ததாக கூறி கணவர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். புகார் பதிவு செய்யப்பட்டு அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருடைய அந்தரங்க உறுப்பில் தையல் போட்ட ஊசியும், நூலும் நீக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும் போது, 'இதுபோன்ற வெறி செயலை நாங்கள் பார்த்ததில்லை. மருத்துவத்துக்கு பயன்படுத்தும் நூலுக்கு பதிலாக சாதாரண ஊசி மற்றும் நூலால் தையல் போட்டுள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளனர்.
இம்மாதிரியான வெறிசெயலில் ஈடுபட்ட கணவர் மீது, மனைவியை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதற்காக சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அப்பெண்ணின் கணவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்