குனிந்து பாதம் தொட்டு சாமி கும்பிட்ட பக்தர்.. சாயிபாபா காலடியிலேயே பிரிந்த உயிர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவர் சாயிபாபா கோவிலில் தியானம் செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
சமீப காலங்களில் இளம் வயதினர் பலர் திடீரென ஏற்படும் மாரடைப்பால் உயிரிழந்த செய்திகளை நாம் அதிகமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கோவிலில் தியானம் செய்தபடியே உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கத்னி மாவட்டத்தில் மருந்து கடை நடத்தி வருபவர் ராஜேஷ் மிஹனி. இவர் வாராவாரம் வியாழக்கிழமை அதேபகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த வார வியாழக்கிழமையும் ராஜேஷ் சாயிபாபா கோவிலுக்கு சென்றிருக்கிறார். வழக்கம்போல, அங்கிருக்கும் சாயிபாபா சிலைக்கு அருகில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுளளார் ராஜேஷ்.
வெகுநேரமாகியும் ராஜேஷ் அங்கிருந்து நகராமல் இருப்பதை கண்ட அங்கிருந்த பக்தர்கள் சந்தேகம் அடைந்திருக்கின்றனர். இதனால் அவருக்கு அருகே சென்று சிலர் பார்த்திருக்கின்றனர். கண்களை மூடிய நிலையில் அவர் அமர்ந்திருந்தததால் அவரை எழுப்ப முயற்சித்திருக்கின்றனர். ஆனால், அவர் சுயநினைவின்றி இருப்பதை அறிந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த சிலர் ஆம்புலன்சுக்கு போன் செய்திருக்கின்றனர். அதன் மூலம், அருகில் உள்ள மருத்துவமனைக்கு ராஜேஷ் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் உடனிருந்த அனைவரும் பெரும் சோகத்தில் முழ்கிப்போயினர். முன்னதாக, உத்திர பிரதேச மாநிலத்தில் 20 வயதான மணப்பெண் ஒருவர் மணமேடையிலேயே உயிரிழந்த செய்தி வெளியாகி பலரையும் அதிர செய்திருந்தது. இந்நிலையில், சாயிபாபா கோவிலில் தியானத்தில் இருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்