"என் Friend எந்திரிக்கவே இல்ல.. ரூம்ல பாம்பு இருக்கு..சீக்கிரம் வாங்க"..போலீசுக்கு போன் செஞ்ச நபர்.. உண்மையை போட்டு உடைத்த டாக்டர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் தனது நண்பர் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக கூறிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Also Read | அப்பவே..அப்படியா..?.. ட்ரெண்டாகும் எலான் மஸ்க்கின் பழைய விசிட்டிங் கார்டு.. மஸ்க் போட்ட 'நச்' கமெண்ட்..!
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள மிஸ்ரோட் பகுதி காவல்நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன்னர் ஒருவர் போன் செய்திருக்கிறார். அவர், தனது வீட்டில் தங்கியிருந்த தனது நண்பர் மரணமடைந்திருப்பதாகவும் அறைக்குள் பாம்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற காவல்துறை அதிகாரிகள், உடலை மீட்டிருக்கின்றனர்.
காவல்துறைக்கு போன் செய்த சந்தீப் பாக்மரே, காவல்துறையினரை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அவரது நண்பர் நாவால் சிங் மரணமடைந்துவிட்ட்டதாகவும், அவர் தங்கியிருந்த அறையில் பாம்பு ஒன்று இறந்து கிடப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அறைக்குள் நுழைந்த காவல்துறையினர் சிங்கின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் அந்த அறையில் இறந்துகிடந்த நாக பாம்பையும் அகற்றினர்.
விசாரணை
இதுகுறித்து சந்தீப்பிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, தானும் தனது நண்பரும் இரவில் மது அருந்திவிட்டு படுக்கச் சென்றதாகவும், அடுத்தநாள் காலை நண்பர் எழுந்திருக்காததால் அச்சமடைந்த போது, படுக்கை அருகே பாம்பு கிடந்ததை பார்த்ததாகவும் கூறியுள்ளார். இதன்மூலம், பாம்பு கடித்ததால் சிங் உயிரிழந்திருக்கலாம் என எண்ணி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக சந்தீப் தெரிவித்திருக்கிறார்.
வெளியே வந்த உண்மை
இதனையடுத்து பிரேத பரிசோதனையில் சிங்கின் உடலில் பாம்பின் விஷமோ, பாம்பு கடித்த காயங்களோ இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், மூச்சுத்திணறலால் சிங் மரணமடைந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மீண்டும் காவல்துறையினர் சந்தீப்பிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் சிங் பதூரியா," இரவு நேரத்தில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்ட்டிருக்கிறது. அப்போது சந்தீப் தனது நண்பரான நாவால் சிங்கை கொலை செய்திருக்கிறார். விசாரணையை திசை திருப்ப, இறந்துபோன பாம்பு ஒன்றை சடலத்தின் அருகே போட்டுள்ளார்" என்றார்.
கைது
இந்நிலையில், சந்தீப்பை கைது செய்துள்ள காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கோடு வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? கொலைக்கான காரணம் என்ன? ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் நண்பரை கொலை செய்துவிட்டு, பாம்பு கடித்து இறந்துவிட்டதை போல நாடகமாடிய நபரை காவல்துறையினர் கைது செய்திருப்பது அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | பதவி விலக மறுக்கும் கோத்தபய.. பிரைவேட் ஜெட் வேண்டும் என கோரிக்கை... பரபரப்பில் இலங்கை..!
மற்ற செய்திகள்