”இன்னும் 4 மணி நேரத்துல கல்யாணம்... அலங்காரம் பண்ணிட்டு இருந்த பொண்ண, இப்படி 'அலங்கோலம்' ஆக்கிட்டானே...!” - காதலன் செய்த காரியத்தால், கதறித்துடித்த பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேசத்தில் திருமணத்திற்கு முன் அழகு நிலையம் சென்ற மணப்பெண்ணை, அவரின் முன்னாள் காதலன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூர்ரில் வசிக்கும் சோனு யாதவ் என்ற பெண்மணிக்கு ரத்லம் மாவட்டத்தில் ஜோரா நகரை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மணப்பெண் திருமண நாளின் காலையில் தனது குடும்பத்தினருடன் ஜோரா நகரத்திற்கு வந்து, தன் உறவினர் பெண்ணுடன் பியூட்டி பார்லருக்குச் சென்றுள்ளார்.
அப்போது சோனுவின் முன்னாள் காதலர் ராம் யாதவ் அவரின் செல்போனுக்கு கால் செய்துள்ளார். ஆனால் ராம் யாதவின் போனை எடுக்காமல் இருந்துள்ளார். கடைசியில், யாதவ் தனது நண்பரின் மொபைல் எண்ணிலிருந்து சோனுவை அழைத்துள்ளார். இது தெரியாத எண் என்பதால், சோனு அழைப்பை எடுத்த உடன், யாதவ் எங்கே இருக்கிறாய் எனக்கேட்டு தொல்லை செய்துள்ளார். இதனால் தான் பியூட்டி பார்லரில் இருப்பதாக தெரிவித்துள்ளார் சோனு.
இதையடுத்து சோனு இருக்கும் பியூட்டிபார்லர் இருக்கும் இடத்திற்கு தன் நண்பர் பவன் பஞ்சல் உடன் வந்து பியூட்டி பார்லருக்குள் நுழைந்து மணப்பெண்ணான சோனுவின் தொண்டையை அறுத்து கொலை செய்துள்ளார். சோனுவைக் கொலை செய்த பின்னர், ராம் யாதவ் தனது நண்பர் பவன் பஞ்சலின் பைக்கில் தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்த போலீசார் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து, கொலைக்கு உடந்தையாக இருந்த பஞ்சலை கைது செய்து விசாரித்துள்ளனர். மேலும் இந்த கொலைக்கான திட்டம் குறித்து ராம் யாதவ் பஞ்சலுக்கு முன்பே அறிவித்திருந்தார் எனவும் ராஜஸ்தானில் இருக்கும் ஒரு பேருந்து நிலையத்தில் ராம் யாதவை இறக்கி விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் குற்றத்தில் அவருக்கு உதவி செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் ராம் யாதவை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS