‘இவங்களுக்கு மட்டும் இந்த ரூல்ஸ்ல விதிவிலக்கா?’.. ‘இனிமே அதுவும் இருக்காது’.. மாநில அரசு அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹெல்மெட் அணிவதற்கான விலக்கு வாபஸ் பெறப்படும் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இவங்களுக்கு மட்டும் இந்த ரூல்ஸ்ல விதிவிலக்கா?’.. ‘இனிமே அதுவும் இருக்காது’.. மாநில அரசு அதிரடி!

முன்னதாக இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கே 2 ஹெல்மெட்டுகளை வாங்கியதற்கான ரசீதை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. மேலும் இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

தவிர பெண்கள் மற்றும் 12 வயது வரையிலான குழந்தைகள் ஹெல்மெட் அணிவதற்கான விதி விலக்கினை அறிவித்திருந்தது. ஆனால் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் மோட்டார் வாகனச் சட்டச் சரத்துகள் 14, 15(1), 21 ஆகியவற்றைக் குறிப்பிட்டு விபத்து எல்லோருக்கும் பொதுவானதுதான், யாராக இருந்தாலும் ஹெல்மெட் அணிய வேண்டும் என வாதிட்டார்.

இதனை அடுத்து விரைவில் மத்திய பிரதேசத்தில் பெண்கள் மற்றும் 12 வயது வரையிலான குழந்தைகள் ஹெல்மெட் அணிவதற்கு இருக்கும் விதி விலக்கு வாபஸ் பெறப்படும் என்று அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கினை அடுத்த அமர்வில் விசாரிப்பதற்காக நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

MADHYAPRADESH, VEHICLE, HELMET