"வறுமை காரணமாதான் இந்த வேலைக்கு வந்தேன்".. சுரங்க தொழிலாளிக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..ஒரே நாளில் மாறிய வாழ்க்கை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவருக்கு வைரக் கல் கிடைத்திருக்கிறது.
பன்னா மாவட்டம்
மத்திய பிரதேசத்தின் உள்ள பன்னா மாவட்டத்தில் பல வைர சுரங்கங்கள் இருக்கின்றன. இங்கு உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சுரங்கங்களில் வைரம் தேடுவது வழக்கம். அப்படி, சாதாரண மக்கள் இந்த சுரங்கங்களில் வைரத்தினை கண்டுபிடித்தால், அதனை அதிகாரிகளிடத்தில் .ஒப்படைக்க வேண்டும். அரசு அந்த வைரத்தினை ஏலத்தில் விட்டு, அந்த தொகையை வைர கல்லை கண்டுபிடித்தவருக்கு வழங்கும். அதே நேரத்தில் ஏல தொகையில் இருந்து குறிப்பிட்ட சதவீத பணத்தை வரியாகவும், ராயல்டியாகவும் அரசுக்கு செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்டம்
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் வசித்துவருபவர் பிரதாப் சிங் யாதவ். விவசாயம் செய்துவந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வைர சுரங்கத்தில் தொழிலாளியாக சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுரங்கத்திற்கு சென்ற பிரதாப் வழக்கம்போல பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, தரையில் ஏதோ மின்னுவது போல இருந்திருக்கிறது. ஆர்வத்துடன் அதனை கையில் எடுத்தவர் சந்தோஷத்தில் துள்ளி குதித்திருக்கிறார். காரணம் அது வைரக்கல் தான்.
இந்த வைரக்கல் 11.88 கேரட் இருப்பதாகவும் விரைவில் இது ஏலத்தில் விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பிரதாப்," நான் மிகவும் ஏழ்மையான பின்புலத்தில் இருந்து வந்தவன். என்னிடம் சிறிய விவசாய நிலம் இருக்கிறது. கடந்த 3 மாதங்களாக நான் வைர சுரங்கத்தில் வேலை பார்த்துவந்தேன். இந்த வைர கல் மூலமாக கிடைக்கும் பணத்தினைக் கொண்டு தொழில் துவங்கவுள்ளேன். மேலும், எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இந்த தொகையை பயன்படுத்துவேன்" என்றார்.
பிரதாப் கண்டறிந்த இந்த வைரக் கல் 50 லட்சம் வரையில் ஏலத்தில் விற்கப்படலாம் என்கிறார்கள் அதிகாரிகள். பன்னா மாவட்டத்தில் 12 லட்சம் கேரட் வைரம் வெட்டியிடுக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மக்களுக்கும் இந்த சுரங்களில் பணிபுரிய அதிக ஆர்வம் இருந்துவருகிறது.
இந்நிலையில் பிரதாப் என்னும் விவசாயிக்கு அங்குள்ள சுரங்கத்தில் இருந்து வைரக்கல் கிடைத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்