கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா...? தயவு செய்து எனக்கு ஒரு 'நியாயம்' சொல்லுங்க...! 'திருமண ஊர்வலத்தில் மணமகள் செய்த காரியம்...' - உடைந்து நொறுங்கி போன மணமகன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில், திருமண ஊர்வலத்தின் போது மணமகள் காணாமல் போன சம்பவம் அறிந்து காவல் நிலையத்திற்கு சென்று மணமகன் நியாயம் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ராம்புராவில் வசிக்கும் ராகேஷ் ஹரியாலி என்பவரின் சகோதரிக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. அதன்பின் தன்னுடைய அண்ணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என எண்ணிய அவர், தன் கணவரின் சொந்தகார பெண் ஒருவரை அண்ணனுக்கு திருமணம் பண்ணிவைக்க நினைத்துள்ளார்.
இந்நிலையில், ராகேஷ் ஹரியாலிக்கும், அந்த சொந்தகார பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமண ஏற்பாடுகள் நடந்தது. முன்னதாக மணமகனும், மணமகளும் ஊர்வலம் செல்வதற்காக மேளதாளத்துடன் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தபோது, திடீரென மணமகள் மாயமானார்.
இதனால் தனக்கு நீதி வேண்டும் என சியோனி மால்வா காவல் நிலையத்திற்கு சென்று ராகேஷ் ஹரியாலி புகார் அளித்தார். அதன்பெயரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 'மணமகனின் சகோதரியின் பேச்சைக் கேட்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மணமகளின் விருப்பத்தை கேட்டறிந்தார்களா? என்பது தெரியவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் மற்றொரு காவல் நிலைய எல்லையை சேர்ந்தது என்பதால், மணமகனை டோலோரியா காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தோம்' என கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்