’தூங்காம அழுதுட்டே இருந்தா.. அதான்’.. 15 மாத பெண் குழந்தையைக் கொன்ற தாய்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள பட்டனாகாட்டைச் சேர்ந்த 24 வயதான ஆதிராவுக்கும் ஷாரோனுக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின.

’தூங்காம அழுதுட்டே இருந்தா.. அதான்’.. 15 மாத பெண் குழந்தையைக் கொன்ற தாய்!

இவர்களுக்கு 15 மாத பெண் குழந்தை இருந்த நிலையில், அண்மையில் நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருந்த தன் மகளை ஆதிரா எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனால் குழந்தை எழாததால் அதிர்ச்சியடைந்த அதிரா, தன்னுடைய மாமனாரின் உதவியுடன் மகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று மருத்துவர்கள் சொல்லவும், தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது குழந்தை மூச்சுத் திணறி இறந்தது தெரிய வந்ததை அடுத்து, ஆதிராவின் அக்கம் பக்கத்து வீட்டாரை போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது கூறிய அக்கம் பக்கத்தினர் ஆதிரா அடிக்கடி குழந்தையை அடித்து துன்புறுத்துவதாகக் குறிப்பிட்டனர்.

அப்போதுதான் மேலும் சந்தேகப்பட்ட காவல்துறையினர் ஆதிராவை விசரித்தபோது, அழுதுகொண்டே இருந்த குழந்தையை தூங்க வைக்க முயற்சித்த ஆதிரா, அதில் தோல்வி அடைந்ததால், மேலும் எரிச்சலானதாகவும், இதனால் ஆத்திரத்தில் கையால் வாய் மற்றும் மூக்கைப் பொத்தி குழந்தையைக் கொன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஒன்றரை வயதுங்கூட ஆகாத பச்சிளம் குழந்தையை, பெற்ற தாயே இப்படி ஒரு அற்ப காரணங்காட்டி கொன்றுள்ள கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KERALA, BABY, SAD