Viruman Mobiile Logo top

இறந்து போன மகன், கலங்கி நின்ற மருமகள்.. "அவளுக்கு ஏதாச்சும் பண்ணனும்.." சோகத்திலும் மாமியார் எடுத்த நெகிழ்ச்சி முடிவு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் ஈஷ்வர்பாய் பிமானி. இவரது மகன் சச்சின். 35 வயதாகும் இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், லட்சுமி மித்தல் என்ற பெண்ணுடன் திருமணமானது. தொடர்ந்து, அவர்களுக்கு 2 குழந்தைகளும் பிறந்த நிலையில், குடும்பத்தினருடன் சச்சின் வாழ்ந்து வந்துள்ளார்.

இறந்து போன மகன், கலங்கி நின்ற மருமகள்.. "அவளுக்கு ஏதாச்சும் பண்ணனும்.." சோகத்திலும் மாமியார் எடுத்த நெகிழ்ச்சி முடிவு

Also Read | இப்படியும் ஒரு கின்னஸ் சாதனையா??.. உலகையே திரும்பி பார்க்க வைத்த பெண்.. 106 நாட்கள் தொடர்ந்து செய்த 'அசாத்திய' விஷயம்

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பால் கறக்கும் மின்கருவி மூலம் சச்சின் தனது வீட்டு தொழுவத்தில் பால் கறந்து கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். எதிர்பாராத நேரத்தில் நடந்த சம்பவம் மொத்த குடும்பத்தையும் அதிர்ந்து போக வைத்தது.

கணவரின் பிரிவால் கதறித் துடித்த லட்சுமி, இந்த சம்பவத்தின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். இனியுள்ள காலம், தனது குழந்தைகள் மற்றும் மாமியார் குடும்பத்தினருடன் நாட்களை கழிக்கவும் முடிவு செய்துள்ளார் லட்சுமி.

ஆனால்,  மாமியாரான பிமானி, மருமகளின் வாழ்க்கையை மாற்ற அதிரடி முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார். அதாவது ஒரு மகன் இறந்ததால், அடுத்து ஒரு மகனை தத்தெடுத்து தனது மருமகளுக்கு திருமணம் செய்து வைத்து குடும்பத்தினை பழையபடி கொண்டு வரவும் அவர் சிந்தித்துள்ளார். ஆரம்பத்தில் மாமியாரின் முடிவுக்கு லட்சுமி மறுப்பு தெரிவித்த நிலையில், இறுதியில் அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

mother in law adopt son for her daughter in law

இதன் பெயரில், 35 வயதான யோகேஷ் என்பவரை லட்சுமியின் மாமியார் தத்தெடுத்துள்ளார். முன்னதாக, சச்சினின் குடும்பத்தினர் லட்சுமியின் வாழ்க்கையை எப்படி சீரமைப்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், இறுதியில் இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், இந்த முடிவுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினர் உள்ளிட்டோரும் ஆதரவு அளித்துள்ளனர்.

அதே போல, மாமியார் தத்தெடுத்த யோகேஷ் என்பவரின் பெற்றோர்களும், மகனை லட்சுமியின் வீட்டிற்க்கு அனுப்பி வைக்க சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக நடந்த தத்தெடுப்பு நிகழ்ச்சியை கிராமத்தினர் முழுவதும் பங்கேற்று சிறப்பாக நடத்தி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், யோகேஷை தனது வீட்டிற்கு அழைத்து வந்த மாமியார் ஈஸ்வர்பாய் பிமானி, அதன் பின்னர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து, லட்சுமியுடன் திருமணமும் செய்து வைத்துள்ளார்.

mother in law adopt son for her daughter in law

மகன் இறந்த நிலையில், மருமகளை தவிக்க விடாமல், அவருக்காக ஒரு மகனை தத்தெடுத்து, திருமணமும் செய்து வைத்த மாமியாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | லேட்டா வந்த Delivery ஊழியர்.. கடுப்புடன் கதவைத் திறந்ததும் கலங்கிப் போன கஸ்டமர்... அடுத்தடுத்து 'ட்விஸ்ட்'!!

MOTHER IN LAW, DAUGHTER IN LAW, மாமியார்

மற்ற செய்திகள்