ஒரே நேரத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய அம்மா & மகன்.. பக்கபலமாக இருந்த பாச மகள்.. குவியும் பாராட்டுகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்க மாநிலத்தில் தாய் மற்றும் மகன் ஒரே நேரத்தில் பத்தாவது பொதுத் தேர்வை எழுதி வருகின்றனர். இதற்கு இந்தப் பெண்மணியின் மகள் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய அம்மா & மகன்.. பக்கபலமாக இருந்த பாச மகள்.. குவியும் பாராட்டுகள்..!

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் நடத்தும் நலத்திட்ட விழாவின் பெயரை வெளியிட்டு உருக்கமாக பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ்.!

பாதியில் நின்ற படிப்பு

மேற்குவங்க மாநிலம் பர்த்வான் அருகே அமைந்துள்ளது காட்ஷில்லா கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் ஆயிஷா பேகம் அங்கன்வாடி பணியாளராக உள்ளார். இவருடைய கணவர் விவசாய வேலைகளை கவனித்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மூத்த மகள் ஃபிர்தௌசி எம்ஏ வரை படித்திருக்கிறார். ஆனால் அவர்களுடைய மகன் பர்வேஸ் ஆலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது பள்ளி படிப்பை நிறுத்திக் கொண்டார். இருப்பினும் தனது தாய் மற்றும் சகோதரனை தொடர்ந்து படிக்கும் படி ஃபிர்தௌசி வலியுறுத்தி வந்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

மீண்டும் பள்ளி

இதனை அடுத்து காட்ஷில்லாவில் உள்ள சித்திக் உயர்நிலை மதரசா பள்ளியில் இருவரையும் மிகுந்த சிரமங்களுக்கு இடையே சேர்த்திருக்கிறார் ஃபிர்தௌசி. இதனை அடுத்து வீட்டிலும் இருவருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் அவர். சில தினங்களுக்கு முன்பு மேற்குவங்க மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. இதில் ஆயிஷா பேகமும் அவரது மகன் பர்வேஸ் ஆலமும் தேர்வு எழுதி வருகின்றனர். மெமரி உயர்நிலை மதரசாவில் இருவரும் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களுக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உதவி

இது குறித்து பேசி உள்ள மெமரி உயர்நிலை மதரஸாவின் தலைமை ஆசிரியர் துரத் அலி,"எங்களது பள்ளியில் முதல்முறையாக தாய் மற்றும் மகன் ஒன்றாக தேர்வு எழுதுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டவர்கள் ஆயிஷா பேகத்தை பார்க்கும்போது நிச்சயம் அவர்களுக்குள் உத்வேகம் ஏற்படும். ஆயிஷா மேலும் படிக்க ஆசைப்பட்டால் அதற்கு உதவும் தயாராக இருக்கிறோம். அவருக்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

Mother and son written 10th exam together in west bengal

Images are subject to © copyright to their respective owners.

அட்வைஸ்

இந்நிலையில் தனது படிப்பு குறித்து பேசி உள்ள ஆயிஷா பேகம்,"சிறுவயதில் என்னால் படிக்க முடியவில்லை. ஆனால் என் மகளை நன்றாக படிக்க வைத்திருக்கிறேன். அவள் என்னை படிக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். படிப்பது வேலைக்கு உதவும் என்றும் அதனால் நிறைய கற்றுக் கொள்ள முடியும் எனவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பாள். அதனால் நானும் என் மகனும் மதரஸா பள்ளியில் சேர்ந்தோம். நன்றாக படித்து தேர்வுகளை எழுதி வருகிறோம். என்னைப்போல படிப்பை பாதியிலேயே விட்டவர்கள் மீண்டும் படிப்பை தொடங்க வேண்டும் என அறிவுறுத்துகிறேன்" என்றார். படிப்பை பாதியிலேயே விட்ட தனது தாய் மற்றும் சகோதரனை மீண்டும் கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கும் ஃபிர்தௌசியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ரோபோ.. கார்நாடக பள்ளியில் அறிமுகம்..!

MOTHER, SON, 10TH EXAM, WEST BENGAL

மற்ற செய்திகள்