'திருமணத்துக்காக மத மாற்றமா?'.. அதுக்கும் இதுக்கும் என்னயா சம்மந்தம்? கொந்தளித்த கோர்ட்... பாய்ந்தது வழக்கு.. ‘ஒரே மாதத்தில் இத்தனை பேர் கைதா?’
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணத்துக்காக மத மாற்றத்தில் ஈடுபட்டதாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர், அலகாபாத் ஐகோர்ட் ஒரு புதிய வழக்கினை சந்தித்தது. அதன்படி திருமணத்துக்காக , அதுவும் காதல் திருமணத்துக்காக அங்கு மதமாற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரத்தை அறிந்தது. இதனை அடுத்து, சற்றும் தாமதிக்காத நீதிமன்றம், காதல் திருமணம் எனும்போது அதில் எதற்காக மதம் குறுக்கிடுகிறது என நேரடியாகவே கேள்வி எழுப்பியது.
இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 27ஆம் ஒரு புதிய சட்டத்தையே உத்தரப்பிரதேச அரசு நிறைவேற்றியது. அதன்படி திருமணத்தின் மூலம் மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் பாய்ந்ததால், திருமணத்தின் மூலம் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஒரே மாதத்தில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களில் 35 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மற்ற செய்திகள்