Kaateri Mobile Logo Top

குரங்கு அம்மை அச்சம்... "இதையெல்லாம் தப்பித் தவறிக்கூட செஞ்சுடாதீங்க".. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குரங்கு அம்மை குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவற்றின் பட்டியல் இடம்பெற்றிருக்கிறது.

குரங்கு அம்மை அச்சம்... "இதையெல்லாம் தப்பித் தவறிக்கூட செஞ்சுடாதீங்க".. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை..!

Also Read | "குரங்கு அம்மை பற்றி மக்கள் பயப்படவேண்டாம்.. ஆனா இத மட்டும் கட்டாயம் செஞ்சிடுங்க".. வலியுறுத்திய இந்திய அரசு.. முழு விபரம்..!

குரங்கு அம்மை

வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது. தற்போது 80 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த நோயினால் 22,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது.

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Monkeypox scare Health Ministry shares dos and donts

எச்சரிக்கை

இந்நிலையில், இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருக்கிறது. கேரளாவில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, மத்திய சுகாதரத்துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் குரங்கு அம்மை பரவிவரும் நிலையில் மக்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவற்றின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

Also Read | குரங்கு அம்மைக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு.. விசாரணை தீவிரம்.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு..!

செய்ய வேண்டியவை

பாதிக்கப்பட்ட நோயாளிகளை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தவும்.

உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவவும் அல்லது சானிடைசர்களைப் பயன்படுத்தவும்.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில் இருக்கும்போது, முககவசங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கையுறைகளை அணியுங்கள்.

சுற்றுச்சூழல் சுத்திகரிப்புக்கு கிருமிநாசினிகளைப் பயன்படுத்துங்கள்.- என சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

Monkeypox scare Health Ministry shares dos and donts

செய்யக்கூடாதவை

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் உடைகள், படுக்கை அல்லது துண்டுகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பாதிக்கப்பட்ட நபர்களின் அழுக்கடைந்த உடைகள் அல்லது பொருட்களை தொற்று இல்லாத நபர்கள் அருகில் இருக்கும்போது சுத்தம்செய்ய வேண்டாம்.

குரங்கு அம்மையின் அறிகுறிகள் தென்பட்டால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம்.

தவறான தகவல்களின் அடிப்படையில் மக்கள் குழுக்களை களங்கப்படுத்தாதீர்கள். - எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Also Read | "குரங்கு அம்மை நோய்க்கு இந்த மருந்தை Use பண்ணலாமா?".. ஐரோப்பிய யூனியன் சொன்னது என்ன?.. முழு விபரம்..!

MONKEYPOX, HEALTH MINISTRY, MONKEYPOX DOS AND DONTS, குரங்கு அம்மை

மற்ற செய்திகள்