'என்ன பாத்து கத்துக்கோங்க'...'செருப்பால் அடிக்காமல் அடித்த குரங்கு'...உருகவைக்கும் வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குழாயில் இருந்து வீணாகும் தண்ணீரை குரங்கு ஒன்று அடைக்க முயலும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இது தண்ணீரை வீணாக்குவோருக்கு சரியான சவுக்கடி என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

'என்ன பாத்து கத்துக்கோங்க'...'செருப்பால் அடிக்காமல் அடித்த குரங்கு'...உருகவைக்கும் வைரல் வீடியோ!

இணையத்தில் ஹிட் அடித்து வரும் இந்த வீடியோவை நிஹாரிகா என்ற பெண் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குழாயில் இருந்து தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. அப்போது குழாயின் பின்னல் நின்று கொண்டிருந்த குரங்கு, அங்கு கிடந்த காய்ந்த இலைகளை கொண்டு தண்ணீரை அடைக்க முயற்சி செய்கிறது. ஆனால் எவ்வளவு முயன்றும் அதனால் முடியவில்லை.

இதுகுறித்து பதிவிட்டுள்ள நிஹாரிகா ''விலங்குகளுக்கு இதுபோன்ற அறிவும் புத்திசாலித்தனமும் இருக்கும் போது, மனிதர்களுக்கு ஏன் என்ன தவறு நடக்கிறது என்பது குறித்து எந்த புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள்'' என கேள்வி எழுப்பியுள்ளார். குரங்கின் செயல் மனிதர்களுக்கு ஒரு பெரிய பாடம் என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

TWITTER, LEAKING PIPE, MONKEY, VIRAL VIDEO