‘பழைய நினைவுகளை மறந்த அம்மா’.. மகனின் 15 வருச ‘தவிப்பு’.. எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஒரு ‘மெசேஜ்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

15 வருடங்களுக்கு முன் பிரிந்த சென்ற தாயை பேஸ்புக் உதவியோடு மகனுடன் சேர்த்து  வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பழைய நினைவுகளை மறந்த அம்மா’.. மகனின் 15 வருச ‘தவிப்பு’.. எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஒரு ‘மெசேஜ்’!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ரமாதேவி. இவர் 15 வருடங்களுக்கு முன்னர் தனது கணவர் சவுத்ரியுடன் சண்டைபோட்டு பிரிந்து சென்றுவிட்டார். அப்போது அவரது மகன் மித்ரஜித்துக்கு 7 வயது. மேற்கு வங்கத்திலிருந்து டெல்லிக்கு சென்ற ரமாதேவி, வழக்கறிஞருக்கு படித்திருந்ததால் அந்தத் தொழிலை தொடங்கின. பாட்டியாலா பார் கவுன்சிலில் கிரிமினல் வழக்கறிஞராக தனது பெயரை பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.

Mom found her son after 15 years as she recovered lost memories

இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ரமாதேவி ஷிசோபெரனியா (Schizophrenia) என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு தான் யார் என்பதையே மறந்துவிட்டார். இதனால் அவர் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் டெல்லியிலுள்ள ரஹாப் சென்டர்பார் ஹோப் (Rahab Center For Hope) என்ற என்ஜிஓ-க்கு மாற்றப்பட்டார். இந்த அமைப்பானது பெண்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. அந்த காப்பகத்தில் 5 ஆண்டுகள் தங்கிய நிலையில் ரமாதேவியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் எழுதவும், பிடிக்கவும் தொடங்கினார்.

Mom found her son after 15 years as she recovered lost memories

இந்த சமயத்தில்தான் தனது குடும்பம், மகன் போன்ற விவரங்களை காப்பக நிர்வாகிகளிடம் ரமாதேவி தெரிவித்துள்ளார். அப்போது தனது மகன் பெயர் மித்ரஜித் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து என்ஜிஓ நிறுவனர் யூனிஸ் ஸ்டீபன் ரமாதேவியை அவரது குடும்பத்தாரிடம் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அந்த சமயத்தில் பேஸ்புக் மூலம் ரமாதேவியின் மகன் மித்ரஜித்தை காப்பக நிர்வாகிகள் கண்டறிந்தனர்.

Mom found her son after 15 years as she recovered lost memories

இதுகுறித்து கூறிய மகன் மித்ரஜித், ‘ஒருநாள் என் செல்போனுக்கு உங்களுக்கு ரமாதேவி சவுத்ரி என்ற உறவினர் யாராவது இருக்கிறார்களா என மெசேஜ் வந்தது. அதற்கு ஆம் என்று நான் பதில் அளித்தேன். அதன் பின்னர்தான் எனது தாய் உயிருடன் இருப்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உடனே வீடியோ கால் மூலம் அம்மாவிடம் பேசினார். என்னால் அவரை சட்டென அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. திருமணபுகைப்படத்தில் இருந்த தாயின் தோற்றம் வேறு மாதிரியாகவும், வீடியோகாலில் நான் பேசிய தாயின் தோற்றம் வேறு மாதிரியாக இருந்ததால் என்னால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது’ என கண்கலங்க கூறியுள்ளார். 15 வருடங்களுக்கு பிறகு தாயும், மகனும் பார்த்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்