செங்குத்தான ராட்டினத்தில் ஜாலி ரைடு போன மக்கள்.. கொஞ்ச நேரத்துல நடந்த சம்பவம்.. பதறிப்போன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப் மாநிலத்தில் செங்குத்தான ராட்டினம் ஒன்று கீழே விழுந்ததில் அதில் பயணித்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.
ராட்டினம்
பொதுவாக இந்தியா முழுவதிலும் பொருட்காட்சி, திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது பொதுமக்களை கவரும் வகையில் ராட்டினங்கள் அமைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 அடி உயரத்திற்கு எழும் இந்த ராட்டினத்தில் ஏற பொதுமக்கள் போட்டிபோட்டனர். இந்நிலையில், நேற்று அந்தரத்தில் சுழன்று கொண்டிருந்த ராட்டினம் திடீரென கீழே விழுந்திருக்கிறது.
இதனால் ராட்டினத்தில் இருந்த மக்கள் காயம் அடைந்தனர். மொஹாலியின் Phase-8 ல் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. அதே திடலில் ராட்டினமும் அமைக்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவு ராட்டினத்தில் பயணிக்க மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், திடீரென பலத்த சத்தத்துடன் ராட்டினம் கீழே விழுந்திருக்கிறது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
Credit : Twitter
சிகிச்சை
இந்த விபத்து குறித்த தகவல் உடனடியாக காவல்துறைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு Phase-6 ல் உள்ள சிவில் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் சென்றனர். இதில் பெரும்பாலானோருக்கு கழுத்து மற்றும் தலை பகுதிகளில் காயம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Credit : Twitter
மொஹாலியில் வர்த்தக கண்காட்சியை ஏற்பாடு செய்த உரிமையாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மீது போலீசாரால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. 323, 341, 337 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றிரவு முதல் தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் மொஹாலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Credit : ANI
விசாரணை
இதுகுறித்து பேசிய டிஎஸ்பி ஹர்சிம்ரன் சிங் பால்," நிகழ்ச்சியை நடத்த விழா ஏற்பாட்டாளர்கள் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், இந்த விபத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவர்கள் சட்டத்தின்படி கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை" என்றார்.
மற்ற செய்திகள்