'நாட்டு' மக்களிடையே உரையாற்றும் "மோடி" ... அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ... என்ன அறிவிக்க போகிறார் 'பிரதமர்'?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சீனா, அமெரிக்கா, இத்தாலி உட்பட பல உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

'நாட்டு' மக்களிடையே உரையாற்றும் "மோடி" ... அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ... என்ன அறிவிக்க போகிறார் 'பிரதமர்'?

இந்நிலையில், நாளையுடன் 21 நாட்கள் ஊரடங்கு நிறைவு பெறவுள்ள நிலையில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருந்தார். அதே போல பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் மோடி கலந்து ஆலோசித்திருந்தார்.

முதல்வர்களுடனான பிரதமரின் ஆலோசனைக்கு பிறகு சில மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தது. மற்ற மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனையடுத்து ஊரடங்கின் கடைசி நாளான நாளை, காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் மாதம் இறுதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பல்வேறு தகவல்கள் நாள்தோறும் வெளிவரும் நிலையில் பிரதமரின் நாளைய அறிவிப்பில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தெரிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.