இந்திய பிரதமர் மோடி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு பிரத்யேக பேட்டியின் சிறப்பம்சங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய நாட்டின் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் எடுத்துள்ள பேட்டி  வைரலாகி வருகிறது.

இந்திய பிரதமர் மோடி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு பிரத்யேக பேட்டியின் சிறப்பம்சங்கள்!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கை அல்லாத, குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட பலவற்றையும் பற்றிய கேள்விகளை அக்‌ஷய் குமார் கேட்டுள்ளார். அதற்கு மோடி கூறியுள்ள சுவாரஸ்யமான பதில்கள் பலவும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

இதில் ஹைலைட்டாக, மோடி தான் பிரதமராக வேண்டும் என்று வாழ்க்கையில் நினைத்துப் பார்த்ததே இல்லை என்று உருக்கமாக கூறியுள்ளார். ஒரு பொதுவாழ்க்கையில் இருக்கும் சாதாரண ஆள் அவ்வாறு நினைத்துப் பார்க்க முடியுமா என்ன? என்று கேட்டவர், அப்படியான பின்னணியில் இருந்து வந்த தான், பிரதமராகாமால் இருந்திருந்தாலும் எளிமையான ஒரு வேலைக்கு போயிருக்க வாய்ப்புள்ளதாகவும், தனது தாயார் லட்டு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விநியோகம் செய்திருப்பார் என்றும் பதில் கூறியுள்ளார்.  மேலும் தான் சன்னியாசியாகியிருப்பதற்கும் வாய்ப்பிருந்ததாக கூறினார். அதேபோல் சிறு வயதில் இருந்து தனக்கு ராணுவத்தில் சேரும் விருப்பம் இருந்ததாகவும் கூறியுள்ளார். 

மேலும் சிறுவயதில் தான் தொடங்கியிருந்த வங்கிக்கணக்கைத்தான் 32 வருடங்கள் கழித்து, தான் முதல்வராகும்போது சம்பளத்தை போடுவதற்காக பயன்படுத்தினார்கள் என்றும், அப்போது வந்த 21 லட்ச ரூபாயை தான் நிராகரித்ததாகவும், ஆனால் தன் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு அதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு பலரும் கூறியதாகவும் சொன்ன மோடி, கடைசியில் அந்த பணத்தை ஏழை மக்களுக்கு அளித்துவிட்டதாகக் கூறியுள்ளார். 

இதேபோல் மம்தா பானர்ஜியை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்ட மோடி, அரசியல் களம் என்று வந்துவிட்டால்,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனக்கு போட்டியாக இருந்தாலுங்கூட வருடம் தவறாமல் தனக்கு குர்தாவும் இனிப்பும் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். இளம் வயதில் இருந்தே தனிமையில் வாழ்ந்து, தனக்குத் தேவையானவற்றை தானே செய்துகொள்வதால் தனக்கு உறவுகளுடனான இணக்கம் உண்டாகவில்லை என்றும், பின்னாளில் தனது தாயாருடன் இருக்க நினைத்திருந்தாலும், அவர் கிராமத்தில் இருக்க விரும்பியதால் தன்னால் தாயாருடன் இருக்கவும் நேரம் ஒதுக்க முடியவில்லை என்றும் வருந்தினார்.

தனக்கு உணர்ச்சிகள் வரும் அளவுக்கு கோபம் வருவதில்லை என்றும், கோபமும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடுதான், ஆனால் அதை வெளிப்படுத்தினால் அங்கு எதிர்மறை எண்ணங்கள் வரும் என்பதால் அதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமே தனக்கு வாய்க்கவில்லை என்றும் கூறிய மோடி, கட்டுப்பாட்டுக்கும் கோபத்துக்கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ஒபாமா உள்ளிட்ட பலரும் தன்னை நன்றாக உறங்கச் சொன்னதாகவும், ஆனால் 3 முதல் 4 மணி நேரத்துக்கும் மேல் தனக்கு தூக்கம் தேவைப்படவில்லை என்றும் கூறியுள்ளார். அதே சமயம் தனது உணர்வுகளை ஒரு பேப்பரில் எழுதி தனது தவறுகளை ஆய்வு செய்து தன்னுடைய பொறுப்புகளில் கவனம் செலுத்தும் வழக்கத்தையும் கொண்டுள்ளதாக மோடி கூறியுள்ளார்.

இந்த பேட்டிகளின் இடையே, மோடி பற்றி வந்த சில மீம்களை தனது டேப்லெட்டில் அக்‌ஷய் குமார் மோடிக்கு காண்பித்துள்ளார். அதில் this tea seller can giv Uni- Tea, Equali- Tea என்றிருந்த மீம்ஸை பார்த்து மோடி சிரித்தார்.

BJP, NARENDRAMODI, INTERIVIEW, AKSHAYKUMAR, TRENDINGNOW