‘மோடி கொடுத்த பணம்னு நினைச்சேன்’... ‘இளைஞரின் அதிரவைத்த வார்த்தை’... 'கலங்கி நிற்கும்’... ‘மற்றொரு வாடிக்கையாளர்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில், நடைப்பெற்ற குழப்பத்தால், தனது அக்கெவுண்ட்டில் ஒருவர் செலுத்தியப் பணத்தை, மோடி தான் பணம் தந்திருக்கிறார் என்று நினைத்து, தனது அக்கெவுண்ட்டில் இருந்து மற்றொருவர் பணம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் முக்கியமானது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில், ஆலம்பூர் நகரில் உள்ள ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியா கிளையில்தான், இந்த குழப்பம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ருராய் பகுதியைச் சேர்ந்த ஹூகும் சிங் என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு, இந்த வங்கியில் கணக்கை தொடங்கியுள்ளார். வேலைக்காக ஹரியானா சென்ற அவர், அங்கு உழைத்து வந்த பணத்தை, தனது வங்கிக்கணக்கில் நிலம் வாங்குவதற்காக, சுமார் 1,40,000 ரூபாய் பணம் சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி பண இருப்பை சரிபார்த்தபோது, தனது கணக்கிலிருந்து ரூ.89 ஆயிரம் காணாமல் போனதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வங்கியை அணுகி விசாரித்தார். அப்போதுதான் ரவுனி பகுதியைச் சேர்ந்த ஹுகும் சிங் என்பவர், இந்தப் பணத்தை எடுத்த செலவு செய்தது தெரிய வந்தது. அதாவது, இவரும் இந்த கிளையில்தான் வங்கி கணக்கு தொடங்கியுள்ளார். இவரது பெயரும், பணம் செலுத்தி வந்த ருராய் பகுதியைச் சேர்ந்த ஹுகும் சிங்கின் பேரும் ஒரே மாதிரியாக இருந்ததால், வங்கி ஊழியரின் கவனக்குறைவால், இருவருக்கும் ஒரே அக்கெவுண்ட் நம்பர் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனால், கடந்த ஓர் ஆண்டாக ருராய் பகுதியை சேர்ந்த ஹுகும் சிங் செலுத்திய ரூபாயை, ரவுனி பகுதியைச் சேர்ந்த ஹுகும் சிங் எடுத்து செலவு பண்ணியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பணத்தை திருப்பி தருமாறு ரவுனி பகுதியைச் சேர்ந்த ஹுகும் சிங்கிடம் வங்கி அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ‘வங்கி கணக்கிற்கு தானாக பணம் வந்ததும், கருப்பு பணத்தை மீட்டு, மோடிஜி தான் பணம் தருகிறார் என்று நினைத்து, அதனை செலவு செய்தேன். என்னிடம் பணம் இல்லை, எனக்கு அந்த பணம் தேவைப்பட்டது’ என கூறினார்.
இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ந்துபோயுள்ளனர். பணம் செலுத்திய ருராய் பகுதியைச் சேர்ந்த ஹுகும் சிங், இது தொடர்பாக பலமுறை வங்கிக்கு சென்றும் தனது பணம் இன்னும் திரும்ப கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.