நாட்டின் 'ஏழை' மக்கள் பசியால் வாடக்கூடாது... பிரதமர் 'மோடி' அறிவித்த 'திட்டம்'... முழு விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் ஒருபுறம் கொரோனா அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் இந்தியா - சீனா எல்லை பதற்றம் இருக்கும் வேளையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களிடையே காணொளி மூலம் உரையாற்றினார்.

நாட்டின் 'ஏழை' மக்கள் பசியால் வாடக்கூடாது... பிரதமர் 'மோடி' அறிவித்த 'திட்டம்'... முழு விவரம் உள்ளே!

மோடி தனது உரையில், 'சரியான நேரத்தில் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. அதே போல, கொரோனா மூலம் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியா கொரோனா விஷயத்தில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது' என்றார்.

மேலும், 'பருவ மழை காலம் தொடங்கவுள்ள நிலையில், காய்ச்சல், சளி வரும் என்பதால் நாட்டு மக்கள் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும். முன்னதாக பொது முடக்கத்தை பல இடங்களில் ஒழுங்காக பின்பற்றவில்லை. நாம் இப்போது செய்யும் சிறிய தகவல்கள் நாளை மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தலாம்.  மாஸ்க் அணியாமல் அரசு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் கரீப் கல்யாண் திட்டம் குறித்து பேசிய மோடி, 'இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இதற்காக கடந்த 3 மாதங்களில் மட்டும் 31 ஆயிரம் கோடி ரூபாய் பணஉதவி வழங்கப்பட்டுள்ளது. அதே போல கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். அதே போல நவம்பர் மாதம் வரை 80 கோடி மக்களுக்கு அடுத்த இலவச  ரேஷன் பொருட்கள் சென்று சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பு இதன் மூலம் இலவசமாக நாடு மக்களுக்கு வழங்கப்படும். இதனால் நாட்டின் பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்த அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்