'சைலண்ட்லயும் போட வேணாம்.. ஸ்விட்ச் ஆஃபும் பண்ண வேணாம்'.. அதிகாரிகளிடம் முதல்வர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பள்ளி, கல்லூரிகளிலேயே இப்போதெல்லாம் செல்போன்களை அனுமதித்து, ஆனால் சைலண்ட்டிலோ, அணைத்து வைக்கவோச் சொல்லி மாணவர்கள் அறுவுறுத்தப்படுகின்றனர். பெருகி வரும் அபார தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிகப்படியான பணிகள் அடங்கிய மனித வாழ்வு அதிகம் நம்பியிருப்பது செல்போன்களைத்தான்.

'சைலண்ட்லயும் போட வேணாம்.. ஸ்விட்ச் ஆஃபும் பண்ண வேணாம்'.. அதிகாரிகளிடம் முதல்வர் அதிரடி!

காரணம் முந்தைய கால செல்போன்கள் வெறும் கருத்துப் பரிமாற்றுத்துக்கும், பிந்தைய கால செல்போன்கள் டாக்குமெண்ட்ஸ்களை பல்வேறு வடிவங்களில் பரிமாறிக் கொள்வதற்கும் உதவியதென்றால், தற்கால ஸ்மார்ட் போன்கள் இவை எல்லாவற்றினும் அட்வான்ஸாக இயங்குகின்றன.

நாம் ஒரு நாளைக்கு, எத்தனை முறை தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது முதற்கொண்டு செல்போன்களால் தீர்மானிக்கப்படும் நவீன யுகத்தில் காலையில் எழுந்து, பலருக்கும் முதல் வேலையே செல்போனை எடுத்து அப்டேட்டுகளை கவனிப்பதாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில், உத்திரபிரதேசத்தின் முதல்வருடனான மீட்டிங் ஒன்றிற்காக, பெரும் அதிகாரிகளின் செல்போன்கள் மீட்டிங் ஹாலுக்கு வெளியில், அவரவர் பெயர்கள் எழுதப்பட்ட சீட்டுகள் ஒட்டப்பட்டு வைக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் புகைப்படங்களாக வைரலாகி வருகிறது.

அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பரபரப்பான சூழலில் இருக்கும் நிலையில்,  அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத்துடன் அதிகாரிகள் சந்தித்த இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வெளியே அதிகாரிகளின் செல்போன்கள் வைக்கப்பட்டதாகவும், முக்கியமான மீட்டிங்கின் போது வரும் போன் கால்கள், மெசேஜ் போன்ற கவனச் சிதறல் சத்தங்களையும், செல்போன்களின் ஆடியோ, வீடியோ வசதிகள் மூலம் ஏதேனும் விதிமீறல்கள் நடந்துவிட வாய்ப்புள்ளதாலும், அதிகாரிகளின் செல்போன்கள் இவ்வாறு ஆலோசனைக் கூட்டத்துக்கு வெளியே வைக்கப்பட்டதாக தெரிகிறது.

CELLPHONE, MEETING, UP, YOGI ADITYANATH