LIGER Mobile Logo Top
Tiruchitrambalam Mobile Logo Top

சார்ஜில் கிடந்த போன்.. கொஞ்ச நேரத்துல கேட்ட பயங்கர சத்தம்.. பதறிப்போன குடும்பத்தினர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலத்தில் சார்ஜ் போட்டுக்கொண்டே மொபைல் போனை பயன்படுத்தியபோது சார்ஜர் வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

சார்ஜில் கிடந்த போன்.. கொஞ்ச நேரத்துல கேட்ட பயங்கர சத்தம்.. பதறிப்போன குடும்பத்தினர்..!

Also Read | "தெருவுல நிக்கிறேன்.. உதவி பண்ணுங்க".. முதல்வருக்கு கண்ணீருடன் பாட்டி வச்ச கோரிக்கை.. அடுத்த நாளே ஸ்பாட்டுக்கு போன அதிகாரிகள்.. நெகிழ வைக்கும் பின்னணி..!

சார்ஜில் இருந்த போன்

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியை சேர்ந்தவர் கோமதிப்ராஜபத். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது வீட்டில் போனை சார்ஜில் போட்டிருந்திருக்கிறார். அப்போது அவருடைய மகன் அந்த போனை பயன்படுத்தியதாக தெரிகிறது. சற்று நேரத்தில் சார்ஜர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. மேலும், சார்ஜர் தீப்பிடித்து எரிய துவங்கியிருக்கிறது. சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். சார்ஜரின் பாகங்கள் கையில் ஒட்டிக்கொள்ளவே கோமதிப்ராஜபத் தனது மகனை மீட்க போராடியிருக்கிறார்.

சிகிச்சை

இதனை தொடர்ந்து ராஜ்நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் தனது மகனை சேர்த்திருக்கிறார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லும்படி கோமதிப்ராஜபத்திடம் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுபற்றி கோமதிப்ராஜபத் பேசுகையில்,"கடந்த சனிக்கிழமை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த எனது மகன், சார்ஜரில் கிடந்த போனை எடுத்தபோது அது வெடித்துச் சிதறியது. சார்ஜர் தீப்பிடித்ததுடன் சில பாகங்கள் என்னுடைய மகனின் கையில் ஒட்டிக்கொண்டன. இதனை தொடர்ந்து அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்" என்றார்.

Mobile phone charger explodes in Madhya Pradesh

பேட்டரி

மொபைல் பேட்டரியை அதிக அளவில் சார்ஜ் செய்வதுதான் பேட்டரி வெடிப்பதற்கு மிகப்பெரிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பேட்டரி அதிகமாக சார்ஜ் செய்யப்படும்போது, அதிக லித்தியம் அயனிகள் கேத்தோடிலிருந்து அனோடிற்கு பயணிக்கின்றன. மேலும், சார்ஜ் போட்டுக்கொண்டே போனை பயன்படுத்துவதால் போன் மற்றும் சார்ஜர் இரண்டுமே ஒரே நேரத்தில் சூடாகிறது. இதுவும் வெடிவிபத்துக்கு காரணமாக அமையலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் சார்ஜில் கிடந்த போனை எடுக்க சென்றபோது அது வெடித்துச் சிதறிய சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Also Read | 431 ஊழியர்களுக்கும் போனஸ்.. 'Boss' சொன்ன அதிரடி அறிவிப்பு.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு விஷயம் தான் காரணமாம்"

MADHYA PRADESH, MOBILE PHONE, MOBILE PHONE CHARGER, MOBILE PHONE CHARGER EXPLODES

மற்ற செய்திகள்