'மோடி'யின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன 'ஸ்டாலின்'.. தன்னுடைய 'ட்விட்டர்' பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டது என்ன??..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வரும் நிலையில், சுமார் 160 தொகுதிகள் வரை, ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி, 130 தொகுதிகளுக்கு மேல், இதுவரை வெற்றி பெற்றுள்ளது.

'மோடி'யின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன 'ஸ்டாலின்'.. தன்னுடைய 'ட்விட்டர்' பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டது என்ன??..

இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். நாட்டு நலனை மேம்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என மோடி, தனது ட்வீட்டில்.குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமரின் வாழ்த்துக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து, பதில் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.

அதில், 'உங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றி. மாநிலத்தின் தேவையை நிறைவேற்ற, மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதை எதிர்நோக்கியுள்ளேன். கூட்டாட்சி ஒத்துழைப்பு மூலம், கொரோனா தொற்றை  வீழ்த்தி, வளர்ச்சி பாதையில் பயணிப்போம் என நம்புகிறேன்' என தனது பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்