VIDEO: 'நாலு பக்கமும் குப்பை மேடு...' நடுவில 'கெத்தா' வந்து நின்ன 'மாடல்' அழகி...! என்ன காரணம்...? - டிரெண்டிங் ஆகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

2020-ஆம் ஆண்டில் மிஸ் ஜார்க்கண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டமாடல் அழகி சுர்பி. இவர், ராஞ்சியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ஜிரியில் உள்ள குப்பைக் கிடங்கில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

VIDEO: 'நாலு பக்கமும் குப்பை மேடு...' நடுவில 'கெத்தா' வந்து நின்ன 'மாடல்' அழகி...! என்ன காரணம்...? - டிரெண்டிங் ஆகும் வீடியோ...!

இந்தியாவில் நிலவும் குப்பை நெருக்கடியை எடுத்துச் சொல்லும் பொருட்டு, திட்டமிட்டு இந்த வீடியோவை படமாக்கி இருக்கிறார் சுர்பி. இதற்கு காரணமாக இருந்தவர், புகைப்பட கலைஞர் பிரஞ்சல் குமார். சுற்றுச்சூழலுக்கு இதுபோன்ற குப்பை கிடங்குகள் ஏற்படுத்தும் ஆபத்தை சொல்வதற்காக இதுபோன்ற பிரசாரத்தை இதற்கு முன்பும் பிரஞ்சல் குமார் செய்துள்ளார். 

இது தொடர்பாக பேசியுள்ள பிரஞ்சல் குமார், "நாம் ஆண்டுதோறும் சுமார் 62 மில்லியன் டன் குப்பைகளை உருவாக்குகிறோம், அதில் 45 மில்லியன் டன் சுத்திகரிக்கப்படாமலே விட்டுவிடுகிறோம். இது மொத்தக் கழிவுகளில் 75% ஆகும். அதாவது, இந்தியாவில் இருக்கும் கழிவுகளை லாரிகளில் கணக்கிட்டால் மூன்று மில்லியன் லாரிகள் அளவு இருக்கும். இந்த லாரிகளை வரிசைப்படுத்தினால் அவை பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான பாதி தூரத்தை அடையும்.

ராஞ்சியில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் குப்பை கொட்டுவது ஒரு பிரச்னை என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் நோக்கம் பிரச்னையை முன்னிலைப்படுத்துவது ஆகும். இதனால் அரசு ஒரு தீர்வைக் காணும் என்பதால், இதுபோன்ற முயற்சிகளை செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ராஞ்சி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது. அதன்படி, நகராட்சி துணை ஆணையர் ஷீதல் குமாரி கடந்த புதன்கிழமை (01-09-2021) ஒரு கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில் "குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பயோ கேஸ் ஆலை ஜிரியில் கட்டப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும் இந்த ஆலையின் பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க திட்டமிடப்படுள்ளது'' என முடிவெடுக்கப்பட்டது.

 

மற்ற செய்திகள்