"அழகிப் போட்டியில் ஜெயிச்சாச்சு... இனி சொல்லிடலாம்!"...பூட்டி வெச்ச ரகசியத்தை போட்டு உடைச்ச இளம் பெண்!.. கிடுகிடுவென தீயாய் பற்றிய சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரான்சில் அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இளம்பெண் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் அளித்துள்ள பேட்டியால் அவருக்கு கடும் சிக்கல் எழுந்துள்ளது.
பிரான்சின் Provence பகுதியில் கடந்த சனிக்கிழமை April Benayoun என்கிற 21 வயது இளம் பெண் அழகி போட்டியில் இடம் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். அப்போது தொலைக்காட்சி ஊடகத்தில் பேட்டி அளித்த தான் ஒரு இஸ்ரேல் வம்சாவளியினர் என்கிற உண்மையை கசிய விட்டார். அவர் சொல்லி முடித்தது தான் தாமதம் உடனடியாக ட்விட்டரில் அவருக்கு கடும் விமர்சனங்கள் பதிவுகளாக எழத் தொடங்கின.
இந்த விமர்சனங்களை முன்வைத்தது தொடர்பாக போலீசார் விசாரணை ஒன்றை துவங்க கூடிய அளவுக்கு இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் பிரான்சில் உள்ள அரசியல்வாதிகளும் அவர் கூறிய இந்த தகவலை கேட்டு அதிர்ந்து உள்ளனர். பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gérald Darmanin என்பவர் இது குறித்து பேசும்போது யூத எதிர்ப்பு மாற்றங்களால், தான் கடும் அதிர்ச்சி கொண்டதாகவும் எனினும் இதை இப்படியே விடக்கூடாது என்றும் கூறியவர் போலீஸ் இதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குடியுரிமை அமைச்சர் Marlène Schiappa என்பவர் இது அழகிப்போட்டி தானே தவிர, யூதர்களை எதிர்ப்பதற்கான போட்டி அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உண்மையில் April Benayoun வாழும் அதே பகுதியை சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரெஞ்சு உறுப்பினர் இந்த தாக்குதல்கள் அருவருப்பானது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் அப்பகுதியை சேர்ந்த இத்தாலிய மற்றும் இஸ்ரேல் வம்சாவளியான ஒரு பிரெஞ்சு குடிமகள் என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்