அமைச்சர் ரோஜாவின் செருப்பை கையில் எடுத்து நடந்த ஊழியர்??.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ!.. வெளியான காரணம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

90 களில் பிரபலமான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரோஜா.

அமைச்சர் ரோஜாவின் செருப்பை கையில் எடுத்து நடந்த ஊழியர்??.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ!.. வெளியான காரணம்!!

                         Images are subject to © copyright to their respective owners

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் ரோஜா. மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கும் ரோஜா, அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரல் ஆகும்.

இதனிடையே, சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற முறையில் சமீபத்தில் தன்னுடைய துறை தொடர்பான பணிகளை பார்வையிடுவதற்காக ஆந்திராவில் பாபட்லா மாவட்டத்தில் உள்ள சூரியலங்கா கடற்கரைக்கு ரோஜா சென்று இருந்தார். அப்படி இருக்கையில் கடல் நீருக்கு அருகே ரோஜா சென்ற போது செருப்பு காலுடன் கடற்கரை மண்ணில் நடப்பது சிரமமாக இருந்ததாக கூறி, கடற்கரையில் ஓரிடத்தில் தன்னுடைய காலணிகளை கழற்றி வைத்துள்ளார்.

தொடர்ந்து ரோஜா கடல் நீரில் இறங்கி இருந்த சூழலில் அவரது இரண்டு காலணிகளையும் ஊழியர் ஒருவர் கையில் வைத்துக் கொண்டு நடந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி சர்ச்சையை உண்டு பண்ணி இருந்தது. ரோஜாவின் காலணியை ஊழியர் தூக்கி நடந்தது கடும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் ரோஜாவின் காலணிகளை கையில் எடுத்து வந்தவரும் சூரியலங்கா கடற்கரை ரிசார்ட்டின் ஊழியர் என கூறப்படும் சிறுத்யோகி சிவ நாகராஜு என்பவர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, அமைச்சர் தன்னிடம் காலணிகளை எடுத்து வருமாறு கூறவில்லை என்றும் கடல்நீரில் அந்த காலணிகள் அடித்து செல்லாமல் இருக்க அதனை ஓரமாக வைப்பதற்காக கையில் எடுத்து வந்தேன் என்றும் சிவா நாகராஜு கூறும் நிலையில், அந்த சம்பவம் தான் இப்படி விமர்சனத்தை உண்டாக்கி உள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

MINISTER ROJA, BEACH

மற்ற செய்திகள்