அதான் '3-வது' அலை தான் வரப்போகுதே...! அப்போ '2-வது அலை' முடிஞ்சுருக்கும்னு நினைச்சீங்களா...? - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் கூறிய 'அதிர்ச்சி' தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் தற்போது மூன்றாம் அலை குறித்து முன்னேற்பாடுகள் செய்து வரும் நிலையில், இன்னும் இரண்டாம் அலையே முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதான் '3-வது' அலை தான் வரப்போகுதே...! அப்போ '2-வது அலை' முடிஞ்சுருக்கும்னு நினைச்சீங்களா...? - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் கூறிய 'அதிர்ச்சி' தகவல்...!

இந்தியாவில் சில மாநிலங்களில் முன்பு இருந்ததை விட கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவின் இரண்டாம் அலை முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள், மூன்றாம் அலைக்கு ஆயத்தமாகி வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்கள் பேட்டியில், 'இன்றைய தேதியில் உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. இந்தியாவில் நாம் கொரோனா 2ஆம் அலை முடிந்துவிட்டது என எண்ணுகிறோம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் 2-வது அலை பரவல் இன்னும் ஓயவில்லை.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி 279 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு  பதிவாகியது. கேரளாவில் 10 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இந்தியாவில் சுமார் 18 மாவட்டங்களில் 47.5 சதவீதம் பாதிப்புகள் பதிவாகி வருகிறது. கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மாவட்டங்கள் அடங்கியுள்ளன' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்