பிரதமருடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு.. நீட் உள்ளிட்ட பரபரப்பு கோரிக்கைகள் முன்வைப்பு .. முழு விவரம்
முகப்பு > செய்திகள் > இந்தியாபாரதப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!!. பும்ரா உடல்நிலை பற்றி வெளியான தகவல்.. கூடவே இன்னொரு சிக்கல்..
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், கடந்தாண்டு மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் புது தில்லி சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், இந்த சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் உடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, "மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று டெல்லியில் சந்தித்து கலந்துரையாடினோம். அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதலை தெரிவித்தேன். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் நலன் குறித்து விசாரித்தார்.
Images are subject to © copyright to their respective owners.
தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் எடுக்கப்படும் முன்னெடுப்புகள் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது, #TamilNaduCMTrophy, #Khelo_India-ஐ தமிழ்நாட்டில் நடத்துவது, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது, தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்." என உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Had a pleasant meeting with our Hon'ble PM @narendramodi today. I shared my deepest sympathies with him for his mother's passing away. He conveyed his regards to our Hon'ble CM @mkstalin. He enquired about the initiatives being taken in TN sports. (1/2) pic.twitter.com/2HNJ7kkO0z
— Udhay (@Udhaystalin) February 28, 2023
மற்ற செய்திகள்