இறந்து 'நான்கு' நாட்களுக்கு பின்... அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'சடலம்'... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாபுலம்பெயர் தொழிலாளர் ஒருவரின் உடல் நான்கு நாட்களுக்கு பிறகு ரெயிலின் கழிவறையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப சிறப்பு ரெயில்கள் அனைத்து மாநிலங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், கோரக்புரில் இருந்து ஜான்சிக்கு வந்தடைந்த ரெயிலில் தொழிலாளர் ஒருவர் கழிவறையில் இறந்து கிடக்கும் தகவல் நான்கு நாட்களுக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளது.
ஜான்சி ரெயில் நிலையம் வந்தடைந்த ரெயிலை சுத்தம் செய்ய வேண்டி ரெயில்வே பணியாளர்கள் உள்ளே சென்ற போது கழிவறையில் உடல் ஒன்றைக் கண்டுள்ளனர். உடல் முன்னதாகவே இறந்து அழுகி துர்நாற்றம் வீசவும் ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து போலீசார் மருத்துவக் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தில் இருந்து கிடைத்த ஆதார் கார்ட் மூலம் அவரின் பெயர் மோகன் லால் சர்மா என்பதும், பாஸ்தி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அவர் மும்பையில் பணிபுரிந்து வந்த நிலையில் அங்கிருந்து ஜான்சி வந்தடைந்த அவர், அங்கிருந்து மற்றொரு ரெயில் ஏறி கோரக்பூர் சென்றுள்ளார். இந்த ரெயில் நான்கு நாட்களுக்கு பிறகு, ஜான்சி வந்தடைந்த நிலையில் அவரது உடல் ஊழியர்களால் கண்டறியப்பட்டது. மேலும், அவரது பாக்கெட்டில் 27 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்