VIDEO : எந்திரிமா 'வீட்டுக்கு' போலாம்... அம்மா 'இறந்தது' தெரியாமல் எழுப்பும் 'குழந்தை'... இதயத்தை 'ரணமாக்கிய' சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் ரயில் நிலையம் அருகே தாய் உயிரிழந்தது கூட தெரியாமல் துணியால் மூடப்பட்டிருக்கும் சடலத்துடன் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்த காட்சிகள் பார்ப்பவர்களின் மனதை உருக வைக்கும் நிகழ்வாக உள்ளது.

VIDEO : எந்திரிமா 'வீட்டுக்கு' போலாம்... அம்மா 'இறந்தது' தெரியாமல் எழுப்பும் 'குழந்தை'... இதயத்தை 'ரணமாக்கிய' சோகம்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இந்த ஊரடங்கின் காரணமாக நாடெங்கிலுமுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து, வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல வேண்டி சிறப்பு ரெயில்கள் பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயிலில் வந்த பெண் ஒருவர் பீகார் மாநிலம் முசாபர்நகர் வந்தடைந்த போது, கடும் வெப்பம் மற்றும் பசியால் நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் சடலத்தின் மீது மூடப்பட்டிருக்கும் நிலையில், பெண்ணின் குழந்தை தாய் இறந்தது கூட தெரியாமல் அந்த துணியை இழுத்துக் கொண்டே இருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்களின் மோசமான நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது.

இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் அந்த பெண் கிளம்பியுள்ளார். ரெயிலில் இருந்த போதே உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வந்து உடல்நலம் சரியில்லாமல் இருந்த நிலையில், அவர் இறங்க வேண்டிய முசாபர்நகர் ரெயில் நிலையம் அடைவதற்கு முன் சரிந்து விழுந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் முசாபர்நகர் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டது. முன்னதாக சில தினங்களுக்கு முன் இதே ரெயில் நிலையத்தில் இரண்டு வயது குழந்தை போதிய உணவு இல்லாததாலும், கடுமையான வெப்பத்தின் காரணமாகவும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்