'வம்படியாக மியாவிடம் நெட்டிசன் கேட்ட கேள்வி'... 'ஓஹோ, இப்படி கேள்வி கேக்குறீங்களா'?... மியா கலிஃபா கொடுத்த அல்டிமேட் பஞ்ச் பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முன்னோர்கள் குறித்து பேசிய நெட்டிசனுக்கு மியா கலிஃபா கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வம்படியாக மியாவிடம் நெட்டிசன் கேட்ட கேள்வி'... 'ஓஹோ, இப்படி கேள்வி கேக்குறீங்களா'?... மியா கலிஃபா கொடுத்த அல்டிமேட் பஞ்ச் பதில்!

டெல்லி எல்லையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மியா கலிஃபா, ரிஹானா, கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் பதிவிட்ட ட்வீட், இந்தியா மட்டுமல்லாது உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களைத் தொடர்ந்து பலரும் இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல்களை எழுப்பி வருகின்றனர்.

அதேவேளையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட மியா கலிஃபா, ரிஹானா உள்ளிட்டோருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய திரைப் பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் களத்தில் குதித்து ட்வீட் போட்டு வருகின்றனர்.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ரிஹானா, மியா கலிஃபா உள்ளிட்டோரின் ட்வீட்களுக்கு அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் சென்று எதிர்வினையாற்றி வருகின்றனர். அப்படி, மியா கலிஃபா போட்ட ட்வீட் ஒன்றுக்கு பதில் அளித்த நெட்டிசன் ஒருவர், உங்களால், உங்கள் முன்னோர்கள் எவ்வளவு பெருமைப்படுவார்கள்? என கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

 

 

நெட்டிசனின் கேள்விக்கு பதில் அளித்த கலிஃபா, தன் தாய் தேசமான லெபனான் நாட்டு செஞ்சிலுவை சங்கத்துக்கு 5,000 அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்த வங்கி பரிவர்த்தனையின் புகைப்படத்தைப்போட்டுள்ளார். அதன் கீழ், இதற்காக என் முன்னோர்கள் முன்பை விட கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். மியா கலிஃபாவின் இந்த பதிலடி பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

 

 

லெபனான் நாட்டைச் சேர்ந்த மியா கலிஃபா, அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆபாச படங்களில் நடித்து உலகளவில் புகழ்பெற்ற அவர், தற்போது அந்த துறையில் இருந்து வெளியேறி சமூக விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக பேசிய அவர், தான் 3 மாதங்கள் மட்டுமே ஆபாச பட துறையில் இருந்ததாகவும், அதனால் ஈட்டிய வருமானம் மிகவும் சொற்பம் எனவும் கூறியிருந்தார். அவரின் இந்தக் கருத்து உலகளவில் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. மிகப்பெரிய பார்ன் (Porn) ஸ்டாராக இருந்த அவர், மிக சொற்ப வருமானம் ஈட்டியதாக கூறியது அனைவருக்கும் வியப்பாக இருந்தது.

இந்நிலையில், ஆபாச படத்தில் நடித்த புகழைக் கொண்டு, சமூக மாற்றத்துக்கு பயன்படுத்துவேன் எனக் கூறிய அவர், உலக அளவில் நடைபெறும் முக்கிய பிரச்சனைகள் குறித்து தன் கருத்தை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கும் கருத்து தெரிவித்தார்.

லெபனான் நாட்டின், பெய்ரூட்டில் நடந்த விபத்துக்கும் தன்னால் இயன்ற அளவில் பணத்தை திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுத்தார். ஹாலிவுட் நடிகை ரேச்சல் வுட் (Rachel Wood), பாடகர் மார்லின் மேன்சன் (Marilyn Manson)  மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ள நிலையில், ரேச்சல் வுட்டுக்கு ஆதரவாக தன் கருத்தை மியா கலிஃபா பதிவு செய்துள்ளார்.

 

மற்ற செய்திகள்