IKK Others
MKS Others

அது தான் 'கடைசியா' எங்க கூட 'பேசுறது'ன்னு தெரியாம போச்சே...! 'டிவியில நியூஸ் பார்த்த உடனேயே...' - வேதனையில் விங் கமாண்டர் குடும்பம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாட்டையே உலுக்கிய குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், மற்றும் மனைவி மதுலிகா ராவத் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனார். அதில் விங் கமாண்டர் பி.எஸ்.சவுகானும் ஒருவர்.

அது தான் 'கடைசியா' எங்க கூட 'பேசுறது'ன்னு தெரியாம போச்சே...! 'டிவியில நியூஸ் பார்த்த உடனேயே...' - வேதனையில் விங் கமாண்டர் குடும்பம்...!

பி.எஸ்.சவுகான் விபத்தில் சிக்கிய எம்.ஐ17 வி5 ரக ஹெலிகாப்டரின் தலைமை பைலட் ஆவார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த அவர் தன்னுடைய அம்மா சுசிலா சவுகானுடன் கடைசியாக கடந்த செவ்வாய் அன்று இரவு தொலைபேசி மூலம் பேசியுள்ளார். ஆனால் அது தான் தன் மகனின் கடைசி பேச்சு என்பது அப்போது சுசிலாவிற்கு தெரியாது.

புதன் கிழமை மதியம் கோவை சூலூரில் இருந்து பி.எஸ்.சவுகான் ஓட்டிச் சென்ற ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த செய்தியை, பி.எஸ்.சவுகானின் மாமனார் தொலைபேசி மூலம் சவுகானின் அம்மாவிடம் டிவியை பார்க்குமாறு கூறியுள்ளார்.

டிவியை ஆன் செய்த அவர், தன்னுடைய மகன் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதும், அதில் இருந்தவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பது அந்த காட்சிகளை பார்த்தபோது புரிந்துவிட்டது. அதிர்ச்சியடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இந்த கொடூர விபத்தில் இறந்த விங் கமாண்டர் பிரிதிவ்.எஸ்.சவுகானுக்கு மனைவி, 12 வயதில் மகள் மற்றும் 9 வயதில் ஒரு மகன் உள்ளனர். சவுகான் குடும்பத்தில் இளைய மகன், அவருக்கு நான்கு அக்காக்கள் இருக்கின்றனர். அனைவரிடமும் நன்றாக பேசக்கூடிய என் மகன் இறந்ததை டிவி செய்திகள் மூலம் அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனோம் என சவுகானின் தந்தை சுரேந்திர சிங் சவுகான் கண்ணீருடன் கூறியுள்ளார்.

மறைந்த சவுகானின் அக்கா மினா சிங் கூறும்போது, 31 வருடங்களுக்கு பிறகு இந்த வருடத்தில் தான் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று சகோதரிகள் அனைவரும் என் தம்பியை சந்தித்து மகிழ்ந்தோம்.

நாங்கள் அவனிடம் என்ன கேட்டாலும் எங்களுக்காக கேட்டதை வாங்கி தருவான் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

BIPIN RAWAT, BIPIN RAWAT HELICOPTER ACCIDENT, பிபின் ராவத், பி.எஸ்.சவுகான், எம்.ஐ17 வி5, HELICOPTER, CRASH, PS CHAUHAN

மற்ற செய்திகள்