எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர்கள் 'ஆக்சிடன்ட்' ஆகுறது இது 'முதல்' தடவ இல்ல...! - வெளிவந்துள்ள பல 'ஷாக்' தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படையின் அதிநவீன எம்ஐ17வி5 ஹெலிகாப்டர் கடந்த 2012-ஆம் ஆண்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ரக ஹெலிகாப்டர்கள் இதற்கு முன் சில விபத்துகளை சந்தித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கோவை சூளூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக நேற்று (08-12-2021) காலை இரண்டு ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன.
அதில், ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர்தான் குன்னுர் அருகே மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த பிபின் ராவத் அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். ஒரே ஒருத்தர் மட்டும் மீட்கப்பட்டு வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் கடந்த 2012-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரை கசான் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த ஹெலிகாப்டரில் காலநிலையைத் தெரிந்து கொள்ளும் ரேடார் பொருத்தப்பட்டுளளது.
விமானப்படையில் சேர்க்கப்பட்ட கடந்த 10 ஆண்டுகளில் இந்த எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டர்கள் இதற்கு முன்பும் சில விபத்துக்களைச் சந்தித்துள்ளது.
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி கிழக்கு அருணாச்சலப்பிரதேசத்தில் ராணுவத் தளத்தில் தரையிறங்கும்போது திடீரென தரையில் மோதியது. ஆனால், சிறுவிபத்து என்பதால், விமானிகள், வீரர்கள் சிறு காயங்களுடன் தப்பித்தனர்.
இதைத்தவிர, 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம், இமயமலைப்பகுதியில் கேதார்நாத் அருகே மலைப்பகுதியில் மோதி விழுந்து. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த 6 பேரும் எந்தவிதமான காயமும் இன்றி உயிர் தப்பினார்கள்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அருணாச்சலப்பிரதேசம், தவாங் அருகே சீனாவின் எல்லைக்கு அருகே இந்த ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
அப்போது ஹெலிகாப்டரில் பயணித்த 7 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
2013ம் ஆண்டு ஜூன் 15்-ஆம் தேதி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இந்த ரக ஹெலிகாப்டர் மீட்புப்பணியில் ஈடுபட்டு, கேதார்நாத்திலிருந்து திரும்பியது. அப்போது நடந்த விபத்தி்ல் ஹெலிகாப்டரில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி குஜராத்தின் ஜாம்நகர் விமானப்படைத் தளத்திலிருந்து 10கி.மீ தொலைவில் இந்த எம்ஐ ரக ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 9 வீரர்களும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி அருணாச்சலப்பிரதேசம் தவாங் அருகே நடந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 12 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்த தகவல்களின் மூலம் இந்த ரக விமானம் விபத்தை சந்திப்பது முதன்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்