'இதோட முடிஞ்சு போயிட்டதா நெனைக்காதீங்க, இனிமேல் தான்...' 'டாக்டே' புயலை தொடர்ந்து... - எச்சரிக்கை விடுத்த வானிலை நிபுணர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த இரு நாட்களுக்கு முன்பு தான், மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ‛டாக்டே' புயலாக வலுவடைந்தது, அதிதீவிர புயலாகி மாறி கேரளா, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்தது.
தற்போது தான் புயல் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், இதுபோல பல மடங்கு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, பூமி வெப்பமயமாதல் பிரச்சனை காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் கடல் கொந்தளிப்பு, புயல் போன்றவை அதிகளவில் ஏற்படக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் புயல்கள் அரபிக் கடலை விட, வங்கக்கடலில் நான்கு மடங்கு அதிகமான புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதாகவும், இவை கடந்த 150 முதல் 200 ஆண்டுகளின் தரவு எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, புனே இந்தியா வானிலை மையத்தின் தலைமை அதிகாரியான கே.எஸ்.ஹோசாலிகர் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளில் உருவான புயல்களில் 4க்கு 1 என்ற வேறுபாடு நிலவுவதை சுட்டிக் காட்டியுள்ளார்.
அதோடு இம்மாதிரியான புயல்கள் உருவாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இம்மாதிரியான நிலைமை மாறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலை விட வெப்பம் குறைவாக உள்ள அரபிக் கடலிலும் இப்போது வெப்ப நிலை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
மற்ற செய்திகள்