'அனகோண்டாவுக்கு தண்ணி காட்ட முயன்ற இளைஞர்'... 'கதறிய மனைவி'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅனகோண்டா வகை பாம்பை கைகளால் பிடிக்க முயற்சிக்கும் 2014 ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அனகோண்டா வகை பாம்புகள் மிகவும் ஆபத்தான மற்றும் அச்சுறுத்தும் வகையைச் சேர்ந்த பாம்புகள் ஆகும். தென் அமெரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்த வகை பாம்புகள், நீர் நிலைகளிலேயே வாழும் தன் இரையைப் பிடியில் இறுக்கிக் கொன்று உட்கொள்ளும். இப்படி அச்சமூட்டும் அனகோண்டாவைக் கையில் பிடிக்கும் வகையில் 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ இப்போது வைரலாகி இருக்கிறது
இதுகுறித்து "டெய்லி மெயில்" வெளியிட்டுள்ள செய்தியில் பிரேசில் நாட்டின் சாண்டோ மரியா எனும் ஆற்றில் சிர்லேய் ஒலிவிரியா, அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ் மற்றும் நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்று கொண்டிருக்கும் போது சுமார் 17 அடி நீளமுள்ள அனகொண்டா பாம்பு தென்பட்டுள்ளது. அதன் வாலைப் பிடித்து போர்க்ஸ் இழுத்துள்ளார்.
இந்தச்சூழ்நிலையில் அனகோண்டாவைப் பிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட, அவர்களின் படகு தாறுமாறாகச் சுழன்று செல்கிறது. போர்க்ஸின் மனைவி ஒலிவிரியா பாம்பை விட்டுவிடுமாறு கதறுகிறார். ஒரு கட்டத்தில் போர்க்ஸின் பிடியிலிருந்து அனகோண்டா நழுவி செல்கிறது. இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. பாம்பைப் பிடிக்க முயன்ற 3 பேருக்கும் தலா 600 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
— because men live less (@menlivesless) June 26, 2020
மற்ற செய்திகள்