'தேங்க்ஸ் மக்கா!'.. 'தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை'.. பரிதவித்த தாய் யானை.. நெகிழவைத்த மனிதர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை ஒன்று தொட்டிக்குள் விழுந்ததை, அடுத்து மனிதர்களின் உதவியோடு அந்த குட்டி யானை உயிரோடு மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியின் புறநகர்ப் பகுதியில் உள்ளது வனத்துறைக்கு சொந்தமான இடம். இங்கு தண்ணீர் குடிப்பதற்கான தொட்டி கட்டப்பட்டுள்ளது. அவ்வழியே வந்த குட்டியானை மிகவும் தாகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்க முயன்றுள்ளது.
ஆனால் தண்ணீர் குடிக்கும்போது தவறிப்போய் தொட்டிக்குள் விழுந்துவிட்டது. இதனைக் கண்ட தாய் யானை குட்டி யானையை காப்பாற்ற முயன்றது. ஆனால் அப்பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்துவந்து ஜேசிபி உதவியுடன் குட்டியானை மேலே வர உதவினர்.
இதனைப் பார்த்த தாய் யானை, தன் குட்டியை மனிதர்கள் மீட்ட நிம்மதியுடன் காட்டுக்குள் சென்றது.
ELEPHANT, ASSAM, RESCUE