காரில் பட்டாசு கொளுத்திய 'ரகடு பாய்ஸ்'.. தொக்கா தூக்குன போலீஸ்.. ரோட்லயே வெச்சு ஸ்பாட் பனிஷ்மென்ட்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் தீபாவளியன்று காரின் மேற்பகுதியில் பட்டாசு கொளுத்தி மக்களுக்கு இடையூறு அளித்ததாக கூறி, இளைஞர்களுக்கு சாலையிலேயே காவல்துறையினர் தண்டனை அளித்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | வெளிலதான் அழகு நிலையம் & ஸ்பா.. உள்ள நடந்ததே வேற.. போலீஸ் ரெய்டில் சிக்கிய தம்பதி.! புதுச்சேரியில் பரபரப்பு
இந்தியாவில் கடந்த 24 ஆம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்தும், பலவித உணவுகளை ருசித்தும், பட்டாசுகள் வெடித்தும் இந்த பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சமீப ஆண்டுகளில் தீபாவளி அன்று விதவிதமான பட்டாசுகளை வித்தியாசமான முறையில் வெடித்து அதனை வீடியோவாக சமூக வலை தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் விபரீதமான முறையில் பட்டாசுகளை வெடிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் காரின் மேற்புறத்தில் பட்டாசுகள் வைக்கப்பட்டு அவை கொளுத்தப்படுகின்றன. காரின் முன்பக்கத்தில் இரு இளைஞர்கள் அமர்ந்திருக்க, பக்கவாட்டிலும் சிலர் தொங்கியபடி பயணிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவ, நெட்டிசன்கள் இது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என கமெண்ட் செய்து வந்தனர்.
இதனையடுத்து, சிலர் இந்த வீடியோவை அகமதாபாத் காவல்துறையின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். இதுகுறித்த விசாரணையில் இறங்கிய போலீசார், காரின் மேற்பகுதியில் பட்டாசு கொளுத்திய 9 இளைஞர்களை பிடித்திருக்கின்றனர். தீபவாளி அன்று இந்த இளைஞர்கள் காரில் உலா வந்த வீடியோவை பகிர, அடுத்தநாளே அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்திருக்கின்றனர்.
இந்த இளைஞர்களை சாலையில் தோப்புக்கரணம் போட செய்திருக்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். இந்த வீடியோவை அகமதாபாத் காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோவின் இறுதியில் அந்த இளைஞர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயரை காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோவை இதுவரையில் 2.3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், 11 ஆயிரம் பேர் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர்.
#AhmedabadPolice pic.twitter.com/ddwZCFd9Gf
— Ahmedabad Police 👮♀️અમદાવાદ પોલીસ (@AhmedabadPolice) October 27, 2022
Also Read | வேலையே போனாலும் ட்விட்டர் CEO-க்கு அடிக்கும் ஜாக்பாட்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?.. முழு விபரம்..!
மற்ற செய்திகள்