'கண்டிப்பா இவன் நம்ம பய தான்'... 'மெலனியாவை அசர வைத்த சுட்டி பையன்' ... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் உள்ள பள்ளிக்குச் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியாவை, தனது நடனத்தால் சிறுவன் ஒருவன் அசர வைத்துள்ளான். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பள்ளி அல்லது கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, மேடையில் தங்களின் திறமைகளைப் பல மாணவ மாணவியர் காட்டுவார்கள். அந்த வகையில் மேடையில் மாணவர்களின் நடனம் நடைபெறும் போது பலரும் அவர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம். அதே நேரத்தில் கீழே அமர்ந்திருக்கும் மாணவர்கள் உற்சாக மிகுதியில் திடீரென நடனமாட தொடங்கி விடுவார்கள்.
அப்போது மொத்த கூட்டத்தின் பார்வையும் கீழே நடனமாடிக் கொண்டிருக்கும் மாணவர் மீது திரும்பி விடும். அதே போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் டெல்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தார். அப்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேடையில் மாணவிகள் நடனமாடிக் கொண்டிருக்கக் கீழே அமர்ந்திருந்த சிறுவன் ஒருவன் திடீரென எழும்பி நடனமாட ஆரம்பித்தான். உடனே அங்கிருந்த அனைவரும் ஆரவாரம் செய்ய, உற்சாக மிகுதியில் தனது ஆட்டத்தைத் தொடர்ந்தான். அப்போது மேடையில் நடந்த கலை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த டிரம்ப்பின் மனைவி மெலனியா, தனது பார்வையை அந்த சிறுவன் மீது திருப்பி, அவன் ஆடுவதை ரசித்துப் பார்த்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தம்பி என் இனமடா நீ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
#WATCH Delhi: First Lady of the United States, Melania Trump watches a dance performance by students at Sarvodaya Co-Ed Senior Secondary School in Nanakpura. pic.twitter.com/dBCuTzvymF
— ANI (@ANI) February 25, 2020