"ஒமைக்ரான் எல்லாருக்கும் வந்து போகும், ஆனா பயப்படத் தேவையில்ல" - மருத்துவ நிபுணர் கூறியுள்ள முக்கிய தகவல்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதுடில்லி: இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒமைக்ரான் தொற்று ஏற்படும் என தலைமை மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.

"ஒமைக்ரான் எல்லாருக்கும் வந்து போகும், ஆனா பயப்படத் தேவையில்ல" - மருத்துவ நிபுணர் கூறியுள்ள முக்கிய தகவல்

மூன்றாம் அலை:

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் உருமாறிய வைரசான ஒமைக்ரான் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தொடங்கி விட்டதாக மருத்துவ குழுக்கள் எல்லாம் உஷார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

medical expert says omicron infections can affect everyone

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்று நோயியல் துறையின் விஞ்ஞான ஆலோசனை குழுவின் தலைவரும், தொற்று நோயியல் நிபுணருமான டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து கூறிய செய்தி வெளியாகியுள்ளது.

ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்த முடியுமா?

அதில், 'ஒமைக்ரான் வைரஸின் பரவலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொருக்கும் இந்த நோய் தொற்று நிச்சயமாக வந்து செல்லும். ஆனால் கொரோனாவின் இரண்டாம் அலை போல இந்த அலை இருக்காது. அதனால் மக்கள் ஒமைக்ரானால் ஏற்படும் கொரோனா பாதிப்பால் அச்சப்படத் தேவையில்லை. ஏனென்றால் புதிய திரிபு லேசானது. டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவினாலும், பாதிப்பை ஏற்படுத்தாது.

medical expert says omicron infections can affect everyone

அதோடு நம்மில் பலருக்கு கூட ஒமைக்ரான் தொற்று வந்து சென்றயிருக்கும். பெரும்பான்மையானோர் நமக்கு நோய் தொற்று ஏற்பட்டதை அறியமாட்டோம். 80 சதவிதத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு எப்போது ஏற்பட்டது என்பது கூட தெரியாது.

85 சதவீதம் பேர் பாதிப்பு:

தடுப்பூசிகள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே நாட்டில் 85 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றின் மூலம் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடும். அதனால்தான் இந்தியா மற்ற நாடுகள்போல் மோசமாக பாதிக்கப்படவில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அரசாங்கத்தின் எந்தவொரு அமைப்பில் இருந்தும், நாங்கள் இதுவரை பூஸ்டர் டோசை பரிந்துரைக்கவில்லை. எனக்கு தெரிந்தபடி முன்னெச்சரிக்கைக்கு பூஸ்டர் டோஸ் பரிந்துரை செய்யப்பட்டது' எனக் கூறியுள்ளார்.

medical expert says omicron infections can affect everyone

28 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக தொற்று ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

OMICRON, EVERYONE, ஒமைக்ரான், மருத்துவ நிபுணர்

மற்ற செய்திகள்