'என்ன ஒரு மனுஷன்...! 'தன் உயிரையே பணையம் வச்சிருக்காரு...' 'அவருக்காக இதுகூட பண்ணலன்னா எப்படி...' ஜாவா பைக் நிறுவனம் அறிவித்துள்ள 'வாவ்' பரிசு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்றி தற்போது இந்தியா முழுவதும் டிரெண்டிங் ஆன மயூரை ஜாவா நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

'என்ன ஒரு மனுஷன்...! 'தன் உயிரையே பணையம் வச்சிருக்காரு...' 'அவருக்காக இதுகூட பண்ணலன்னா எப்படி...' ஜாவா பைக் நிறுவனம் அறிவித்துள்ள 'வாவ்' பரிசு...!

மும்பை வாங்கனி நிலையத்தில் ஊழியராக இருப்பவர் மயூர் செல்கேய். இரயில் நிலையத்தின் நடைமேடையில் ஒரு கண் பார்வையற்ற  பெண்மணியும், ஒரு குழந்தையும் இரயிலுக்கு காத்திருந்துள்ளனர்.

அப்போது தாய் இரயில் நடைமேடைக்கு முன்பு செல்லும்  போது, அவர் கையில் பிடித்திருந்த குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்தது.

அந்நேரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர் மயூர் செல்கே தண்டவாளத்தில் இறங்கி குழந்தையை மீட்ட காட்சி இணையத்தில் பரவி வைரலாகியது.

மயூரின் இந்த செயலை பார்த்த இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பாராட்டியும், அவருக்கு நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.

அதேபோல் இந்தக் காட்சியை இணையத்தில் பார்த்த ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குநர் அனுபம் தாரிஜா, அவருக்குப் புதிய பைக்கை பரிசளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்