இன்ஜினியரிங் படிப்பில் சேர 3 ‘முக்கிய’ பாடங்கள் கட்டாயமில்லை.. புதிய நடைமுறை அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொறியியல் படிப்பில் சேருவதற்கு 3 முக்கிய பாடங்கள் கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

இன்ஜினியரிங் படிப்பில் சேர 3 ‘முக்கிய’ பாடங்கள் கட்டாயமில்லை.. புதிய நடைமுறை அறிவிப்பு..!

தற்போது நடைமுறையில் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்கள் கட்டாயமாக உள்ளன. இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான புதிய நடைமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வரையறுத்துள்ளது. அதில் கணிதம், இயற்பியல், வேதியியில் பாடங்கள் படிக்காதவர்கள் கூட பொறியியல் படிப்பில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maths, Physics, Chemistry not mandatory for engineering, says AICTE

இந்த நடைமுறை வரும் 2021-2022ம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், பயோ டெக்னாலஜி, வேளாண்மை, வணிகம், தொழில்முனைவு, தொழிற்கல்வி என 12 பாடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பில் இதில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியியல் படிப்பில் சேரலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Maths, Physics, Chemistry not mandatory for engineering, says AICTE

பொறியியல் படிப்புக்கு அடிப்படையான கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை 12-ம் வகுப்பில் பயிலாதவர்கள், பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு அவற்றை, இணைப்பு பாடமாக தேர்வு செய்து படிக்கலாம் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

Maths, Physics, Chemistry not mandatory for engineering, says AICTE

பொறியியல் படிப்பு 4 ஆண்டுகளாக இருக்கும் சூழலில், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் படிப்பு விட்டு நின்றால், புதிய கல்விக்கொள்கையின்படி திறன் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாத சூழலில், இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்