'கொரோனா தடுப்பூசியே வந்தாலும்’... ‘இதை கட்டாயம் செய்யணும்’... 'இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்’...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் முகக் கவசத்தை தொடர்ந்து அணிய வேண்டும் என ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்க்கவா கூறியுள்ளார்.

'கொரோனா தடுப்பூசியே வந்தாலும்’... ‘இதை கட்டாயம் செய்யணும்’... 'இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்’...!!!

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி ஏற்பாடு செய்த காணொளி கருத்தரங்கில் பேசிய ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்க்கவா, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில், இந்தியாவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

வரும் ஜூலை மாதத்துக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வளர்ந்து வரும் நாடுகளில் 60 சதவீத நாடுகளுக்கு, இந்தியா கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முகக்கவசங்களை துணியால் ஆன கொரோனா தடுப்பூசி என்று வர்ணித்த அவர், கொரோனா தடுப்பு மருந்து வந்தாலும், முகக்கவசத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மற்ற செய்திகள்