"என் பொண்டாட்டி கடல்ல விழுந்துட்டா".. துடிச்சுப்போன கணவன்..மொத்த படையையும் இறக்கிய போலீஸ்.. 2 நாளுக்கு அப்பறம் ஏற்பட்ட டிவிஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் கடலில் மூழ்கியதாக நம்பப்பட்ட நிலையில் 2 நாட்கள் கழித்து காவல்துறை அதிகாரிகள் உண்மையை கண்டுபிடித்திருக்கின்றனர்.
திருமண நாள்
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனிடையே இருவரும் விசாகப்பட்டினத்தில் வசித்துவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த தம்பதியின் இரண்டாவது திருமண நாள் வந்திருக்கிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் கோவிலுக்கு செல்லலாம் என தனது கணவனை அழைத்திருக்கிறார் அந்த இளம்பெண்.
தனது மனைவியின் திட்டத்தை அறியாமல் அதற்கும் ஓகே சொல்லியிருக்கிறார் அவரது கணவர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாசலம் கோவிலுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார் அவர். அதன்பிறகு அருகே இருந்த கடற்கரையில் இருவரும் நேரத்தை செலவிட்டிருக்கின்றனர். அப்போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த அந்த இளம்பெண் திடீரென காணாமல் போகவே, கணவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
தேடல்
சுற்றுப் பகுதிகளில் தேடியும் தனது மனைவி கிடைக்காததால் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார் அவர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை துவங்கினர். அதுமட்டும் அல்லாமல் ராணுவ ஹெலிகாப்டர்கள், படகுகள் ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளது காவல்துறை. இருப்பினும் அந்த பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனிடையே, உண்மையாகவே அந்த இளம்பெண் கடலில் தான் விழுந்தாரா? அல்லது இதற்கு பின்னர் ஏதேனும் சதித் திட்டம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணையில் இறங்கினர். அப்போது தான் காவல்துறைக்கும் கணவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. கடலில் விழுந்ததாக சொல்லப்பட்ட பெண்ணை நெல்லூர் காவல்துறை அதிகாரிகள் உயிருடன் பிடித்திருக்கின்றனர். கூடவே அவரது காதலரும் இருந்திருக்கிறார்.
21 வயதான அந்த இளம்பெண் தனது கணவனை விட்டுவிட்டு காதலுடன் செல்ல இப்படி ஒரு நாடகமாடியது காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்