'கொரோனா வருகிறது'... '8 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த இளைஞர்?'... 'நெட்டிசன்களை திக்குமுக்காட வைத்த பதிவு'... வைரலாகும் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வருகிறது எனக் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்கோ அகார்டஸ் என்பவர் பதிவிட்ட ட்வீட் தான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

'கொரோனா வருகிறது'... '8 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த இளைஞர்?'... 'நெட்டிசன்களை திக்குமுக்காட வைத்த பதிவு'... வைரலாகும் ட்வீட்!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 கோடியைக் கடந்துள்ளது.

Marco Acortes had predicted coronavirus way back in 2013

கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 13.80 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.79 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 06 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

Marco Acortes had predicted coronavirus way back in 2013

கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் பலவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு மார்கோ அகார்டஸ் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” Corona virus….its coming ” என்று ட்வீட் செய்துள்ளார். அது தான் தற்போது சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வரப்போவதை அவர் எப்படிப் பதிவு செய்தார். அவர் தற்போது எங்கு உள்ளார் என்பது போன்ற பல கருத்துகள் இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளது.

மற்ற செய்திகள்