கர்ப்பப்பை நீக்கும் அவலம்.. அதிர்ச்சிக் காரணம் கூறும் பெண்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் கர்ப்பப்பைகள் அகற்றப்படும் அவலம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கர்ப்பப்பை நீக்கும் அவலம்.. அதிர்ச்சிக் காரணம் கூறும் பெண்கள்!

பீட் மாவட்டம் விவசாயத் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. இங்கு உள்ள பெரும்பாலான கிராமங்களில் கரும்பு விவசாயம்தான் முக்கிய தொழிலாக உள்ளது. பெண்கள் உள்பட பெரும்பாலான மக்கள், அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் விவசாயக் கூலிகளாக வேலைப் பார்த்து வருகிறார்கள். கரும்புத் தோட்டங்களில் வேலைபார்க்கும் பெண்களுக்கு கர்ப்பப்பைகள் நீக்கப்பட்டிருப்பதும், அதற்கான காரணமும் நிலைகுலைய வைத்துள்ளது.

மாதவிடாய் சமயங்களில் பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பெண்களால் கடின உழைப்பில் ஈடுபட முடியாது என்ற சூழல் நிலவுகிறது. இதனால் அந்தச் சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும் என்பதால், 'கரும்புத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களின் கர்ப்பப்பையை நீக்கவேண்டும்' எனக் கரும்புத் தோட்ட ஒப்பந்தத்தாரர்கள் வற்புறுத்துவதாக அங்குள்ள பெண்கள் கூறுகின்றனர்.

ஹாஜிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மண்டா உகலே  என்ற பெண்மணி, 'எங்கள் கிராமத்தில் கர்ப்பப்பையோடு ஒரு பெண்ணைப் பார்ப்பதென்பது அரிதிலும் அரிதான காரியம். அனைத்துப் பெண்களுமே  கர்ப்பைப்பை நீக்கப்பட்டவர்கள்தான்' என்று கூறியுள்ளார். இந்தக் கிராமத்துக்கு அருகில் உள்ள வஞ்சரவாடி என்ற கிராமத்தில் வசிக்கும் ஐம்பது சதவிகித பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாதவிடாய் காலம் மட்டுமின்றி, சாதரண நாட்களில் கூட உடல்நிலை சரியில்லாத நிலையில் விடுப்பு எடுக்க முடியாத அவலநிலை நிலவுவதாக சத்யபாமா என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.  மேலும் இங்குள்ள பெண்களுக்கு கழிவறை வசதியும் இல்லாததால், மாதவிடாய் காலத்தில் வேலை செய்வது மிகவும் சிரமம் என்று கூறுகிறார் முதியப் பெண்மணி ஒருவர்.

MAHARASHTRA, WOMBS, SUGARCANE, CUTTING, CONTRACTOR, WOMEN