ஏய் நில்லு... 'நடந்து' சென்ற இளம்பெண்ணிடம் 'தகராறு' செய்து... 'கைநீட்டிய' கொடூரம் இதெல்லாம் 'ஒரு' காரணமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில் இதுவரை சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொடிய வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை சிலர் ஒன்றாக சேர்ந்து தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடு சீனாவுக்கு எதிராக கொந்தளித்து வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் பார்ப்பதற்கு சீனர்களை போல இருப்பதால் அவர்கள் மீதான வன்முறை நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
மணிப்பூரை சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் ஹரியானாவில் தனது நண்பனைக் காண வேண்டி வந்துள்ளார். தனது நண்பனைக் கண்டு திரும்பிய அந்த பெண்ணை அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வழி மறுத்துள்ளார். தொடக்கத்தில் தகாத வார்த்தைகளால் அந்த பெண் பேசினார். மேலும் இளம்பெண்ணை 'கொரோனா' என்றழைத்துள்ளார். தொடர்ந்து இப்படி அவதூறாக பேசினால் போலீசிடம் புகாரளிப்பேன் என இளம்பெண் கூற அந்த பெண்மணியோ போலீசார் எங்கள் பக்கம் தான் என கூறியுள்ளார்
சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் சிலர் அங்கு வந்து அந்த இளம்பெண்ணை கட்டை மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர். அப்போது இளம்பெண்ணின் தலையில் அடி விழ அங்கேயே நினைவிழந்து போயுள்ளார். இளம்பெண்ணை சிலர் சேர்ந்து தாக்குவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டில் இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையிலும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல் மக்களின் மனிதத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.